ராய்ப்பூர் / புதுதில்லி:
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் சரக்கு லாரிகளின் மீது ஏறி பயணம் செய்கிறார்கள், கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் வீட்டிற்கு நீண்ட தூரம் நடந்து செல்வதைத் தவிர்ப்பதற்காக அவர்கள் மேற்கொள்ளும் “ஒரே வழி” இதுதான்.
20 வினாடி வீடியோ காட்சி ஒன்றில்,ஒரு நபர் குழந்தையை லாரியில் உள்ளஒரு தொழிலாளியிடம் ஒப்படைப்பதைக் காண லாம். ஒரு பெண் சேலை அணிந்திருப்பதால் ஏற சிரமப்படுகிறார். சாலையில் நிற்கும் ஒரு தொழிலாளியிடமிருந்து ஒரு குழந்தை மற்றொரு தொழிலாளியை சென்றடைகிறது.தெலுங்கானாவிலிருந்து பயணத்தைத் தொடங்கிய புலம்பெயர்ந்தோர் குழு வீட்டிற்குச் செல்வதற்கு வேறு வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கதறுகிறது. “நாங்கள் என்ன செய்வது… நாங்கள் நாதியற்றவர்கள். நாங்கள் ஜார்க்கண்ட் செல்ல வேண்டும். வேறு வழியில்லை” என்கிறார் அதில் பயணிக்கும் முதியவர் ஒருவர்.புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இந்த மாத தொடக்கத்தில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட சிறப்பு ரயில்கள் குறித்து கேட்டதற்குஅந்த முதியவர் “பயணத்தை மேற்கொள்ள உதவும் எந்த தகவலையும் எங்களால் அறியமுடியவில்லை” என்றார்.
புலம்பெயர்ந்தோர் லாரிகளில் ஏறிக்கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த மாநில போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் “வேறு போக்குவரத்து வழிகள் இல்லை. நிர்வாகம் அவர்களுக்கு சிறப்புப்பேருந்துகளை ஏற்பாடு செய்ய வேண்டும். நான் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்தவன், ஆனால் எனது மட்டத்தில் பேருந்து களை ஏற்பாடு செய்ய முடியாது.” என்றார்.கொரோனா ஊரடங்கால் வேலை யில்லாமல், புலம்பெயர்ந்தோர் தங்கள் கிரா மங்களுக்குச் செல்ல மார்ச் மாதத்திலிருந்து பெரிய நகரங்களை விட்டு வெளியேறி வரு கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்திருக்கிறார்கள், அவர்களில் பலர் தங்கள் பயணத்தை முடிப்பதற்குள் இறந்து விட்டார்கள் என்பதுதான் சோகம்.