கவுகாத்தி,டிச.10- இந்தியாவை மதவெறி தேசமாக மாற்றும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடி யுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரி வித்து செவ்வாயன்று அசாமில் பந்த் நடைபெற்றது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் மக்களவையில் தனது மிருக பலத்தின் மூலம் பாஜக அரசு மசோதாவை நிறைவேற்றியது. மசோதா குறித்த திருத்தங்கள் எதையும் மோடி அரசு கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாண வர் சங்கம் மற்றும் அனைத்து அசாம் மாணவர் சங்கம் சார்பில் செவ்வாயன்று முழு அடைப்பு போராட் டம் நடைபெற்றது. இதனால் கவுகாத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மாணவர் அமைப்பினர் திப்ருகர், ஜோர்பத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.