புதுதில்லி:
மோடி அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு (CAA) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. அதனொரு பகுதியாக, தில்லி ஜாமியா மிலியாபல்கலைக்கழக மாணவ - மாணவியரும் போராட்டத்தில் இறங்கினர்.ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் இந்த போராட்டத்திற்கு எதிராக, பாஜகவினரும், சங்-பரிவாரத்தைச் சேர்ந்தவர்களும் பெரும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். பல்கலைக்கழகத்திற்கு உள்ளேயே புகுந்து மாணவ - மாணவியரைத் தாக்கினர். பொருட்களையும் அடித்து நொறுக்கினர்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தில்லிகாவல்துறையோ, தாக்குதல் நடத்தியவர் களைக் கைது செய்யாமல், பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மாணவ - மாணவியர் மீதே ‘உபா’ (Unlawful Activities - Prevention- Act) சட்டத்தின் கீழ் பொய் வழக்குகளைப் போட்டு சிறையில் அடைத்தது. அவர்களில் சபூரா சர்க்கார் என்ற மாணவியும் ஒருவராவார். இவர் ஒரு கர்ப்பிணி என்ற நிலையிலும், மோடி அரசு கொஞ்சம்கூட ஈவிரக்கமில்லாமல் சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தியது. ஜாமீன் வழங்கவும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன. குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில், 6 மாத கர்ப்பிணியாக இருக்கும்ஒருவரை, சிறையில் அடைத்து சித்ரவதை செய்வதா? என்று மனித உரிமை ஆர்வலர்கள் கேள்விகளை எழுப்பினர்.இந்நிலையில், மாணவி சபூரா சர்காருக்கு ஜாமீன் வழங்கி தில்லி உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவு பிறப்பித்துள் ளது. அரசின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்; விசாரணை அதிகாரியுடன் போனில் தொடர்பில் இருக்க வேண்டும்; தில்லியை விட்டு வெளியேறக் கூடாது ஆகியநிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது.