tamilnadu

img

சிஏஏ-வுக்கு எதிராக போராடிய ஜேஎன்யு மாணவர், முன்னணி ஊழியர் கைது

புதுதில்லி:
ஜேஎன்யு மாணவரும், மாணவிகளின் விடுதி மற்றும் பல்வேறு நலன்களுக்காக தில்லியில் அமைக்கப்பட்டுள்ள பிஞ்ச்ரா தோட் என்னும் அமைப்பின் முன் னணி ஊழியருமான நடாஷா நர்வால், மிகவும் கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டத்தின்கீழ், வெள்ளிக்கிழமையன்று கைது செய்யப்பட்டிருக்கிறார். வட கிழக்கு தில்லியில் நடைபெற்ற மதக் கலவரங்களில் அவர் பங்கு வகித்தாராம். இவ்வாறு காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

பிஞ்ச்ரா தோட் (Pinjra Tod)என்னும் அமைப்பு தில்லி மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் கல்வி கற்றுவரும் பெண்களுக்கான விடுதிகளில் சிறந்த வசதிகளுக் காகப் போராடும் ஓர் அமைப்பாகும். இதன் சார்பில் மே 27 அன்றுட்விட்டரில் ஒரு செய்தி வெளியிடப் பட்டிருந்தது. “உச்சநீதிமன்றம் சிறைகளில் உள்ள நெரிசலைக் குறைப்பதற்காக உத்தரவு பிறப்பித்துள்ள அதே சமயத்தில், மாணவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்திருக்கிறது! கிளர்ச்சியாளர்களைக் கிரிமினல்மயப்படுத்துவதை நிறுத்துக. அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவித்திடுக,” என்று அதில் கூறப்பட்டிருந்தது. இந்தப் பின்னணியில்தான் நர்வால், தில்லிக் காவல்துறையின் சிறப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

தில்லிக் கலவரங்களுக்குப் பின்னால் உள்ள “சதி” குறித்து விசாரிப்பதற்காக இந்தச் சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டிருக்கிறது. வியாழன் அன்று நர்வாலும், மற்றொரு பிஞ்ச்ரா தோட்செயற்பாட் டாளரான தேவங்கனா கலிதாவும், வட கிழக்கு தில்லியின் மதவெறி வன்முறை தொடர்பான வழக்கில்  14 நாட்கள் காவல் அடைப்பு செய்யப்பட்டிருந்தார்கள்.நர்வால், சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஏழாவது நபராவார். கலிதா, தர்யாகஞ்சில் குடியுரிமைத் திருத்தச் சட்டத் திற்கு எதிரான கிளர்ச்சிப் போராட்டத்திற்காக குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட் டிருக்கிறார். அவர்கள் மே 23 அன்று,பிப்ரவரியில் ஜஃப்ராபாத் பகுதியில் நடைபெற்ற குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.(ந.நி.)