tamilnadu

img

தீர்வு காண பட்ஜெட்டில் எதுவுமே இல்லை: சிபிஎம்

பொருளாதார நெருக்கடி

புதுதில்லி, பிப்.1- ஆழமாகிக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு எப்படித் தீர்வு காண்பது என்பது குறித்து எதுவுமே தெரியாத நிலையில் அர சாங்கம் இருந்துவருவதையே மத்திய நிதி அமைச்சரின் பட்ஜெட் உரை வெளிப்படுத்து கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறி யுள்ளது. மத்திய அரசின் பட்ஜெட் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு எப்படித் தீர்வு காண்பது என்பது குறித்து எது வுமே தெரியாத நிலையிலேயே அரசாங்கத்தின் பட்ஜெட் அமைந்திருக்கிறது. பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் காண்பதற்குப் பதிலாக, பொருளாதாரத்தின் தடுமாற்றமான நிலையினை மறைத்திடும் வித்த்திலேயே சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு நிதி யமைச்சர் உரையைப் படித்திருக்கிறார். தரவு களைத் தந்திரமாகக் கையாளுவதற்கு நட வடிக்கைகள் மேற்கொண்டுள்ள போதிலும், பட்ஜெட்டின் எண்கள் பொருளாதார நெருக் கடியை நன்றாகவே காட்டுகின்றன. இந்த பட்ஜெட்டானது, மோடி அரசாங்கமானது, கார்ப்ப ரேட்டுகள் மற்றும் பணம் படைத்தோரின் நலன் களுக்கானதே என்பதைக் காட்டும் விதத்தி லேயே அமைந்திருக்கிறதேயொழிய, பொரு ளாதார மந்தத்திற்கு ஆணிவேராக இருந்துவரு கின்ற, தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சுய வேலை வாய்ப்பை நோக்கித் தள்ளப் பட்டுள்ள உழைக்கும் மக்களின் வாழ்வாதா ரங்கள் குறித்தோ, வேலையின்மையைப் போக்குவது குறித்தோ கிஞ்சிற்றும் கவலைப்பட வில்லை என்பதை வெளிப்படுத்தி இருக்கி றது. உழைக்கும் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்து உள்நாட்டுத் தேவைப் பிரச்சனை யைப் தீர்ப்பதற்குப் பதிலாக, அரசு செல வினத்தை மேலும் குறைப்பதற்கும், நாட்டின் சொத்துக்களை பெரும் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்ப்பதற்குமே திட்டமிட்டுள்ளது. இவை, உழைக்கும் மக்கள் மீது மேலும் கடுமையான அளவிற்கு சுமைகளை ஏற்படுத்திடும்.

பட்ஜெட்டின் முதல் திருகுதாளம் என்பது வருவாய் தொடர்பான விவரங்களில் ஏற்படுத்தி யுள்ள திருத்திய மதிப்பீடுகளாகும். திருத்திய மதிப்பீடுகள், 2018-19ஆம் ஆண்டில் வருவாய் வசூல் பட்ஜெட் மதிப்பீடுகளைவிட மிகவும் கீழ்நிலையில் இருப்பதையே காட்டுகின்றன. அதுவும்கூட வீழ்ச்சியின் அளவை குறைத்தே மதிப்பிட்டிருக்கிறது. மத்திய வரி வருவாய்களின் திருத்திய மதிப்பீட்டு விவரங்கள், 2019-20இன் ஏப்ரல்-டிசம்பருக்கான கணக்கு கட்டுப்பாடு ஜெனரலின் அறிக்கையின் உண்மையான வசூலுடன் ஒத்துப்போகாமல் இணக்கமற்றிருக்கிறது. எதார்த்தமான திருத்திய மதிப்பீடு, மத்திய வருவாயிலிருந்து மொத்த வருவாயில் 1.6 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வீழ்ச்சியடைந்திருப்பதைக் காட்டியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு காட்டாமல் மூடிமறைக்கப்பட்டிருக்கிறது. இத்துடன் உண்மையான செலவினங்களும் காட்டப்படவில்லை. சென்ற ஆண்டும் இதே போன்றுதான் செய்தார்கள். இவ்வாறு திருகுதாளங்களை மேற்கொண்டபின்னரும், 2018-19க்கான திருத்திய மதிப்பீட்டின் வருவாய் விவரங்கள் 2.98 லட்சம் கோடி ரூபாயாகும். இது, பட்ஜெட் மதிப்பீட்டைவிட 1.53 லட்சம் கோடி ரூபாய் குறைவு. இது, மத்திய வரிகள் மூலம் மாநி லங்கள் பெற வேண்டிய தொகைகளைத் தாக்கி டும். ஜிஎஸ்டி வருவாய் வீழ்ச்சியும் மாநிலங்க ளைக் கடுமையாகப் பாதித்திடும் என்று ஏற்க னவே மாநிலங்கள் அச்சுறுத்தப்பட்டிருக்கின் றன.

திருத்திய மதிப்பீடுகள், பல துறைகளுக் கான மத்திய அரசின் செலவினங்களில் பெரிய அளவில் வெட்டு இருக்கும் என்பதையும் காட்டுகிறது. அப்படியிருந்தும் நிதி நெருக்கடி பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதைவிட அதிக மாகவே இருக்கிறது. இதற்குக் காரணம் அர சாங்கம் பொருளாதாரத்தின் அடிப்படையில் மக்களின் தேவையை விரிவாக்குவதற்கான கொள்கையைக் கடைப்பிடிக்காததேயாகும். மாறாக, 2019-20க்கான மத்திய அரசுத்துறை களின் திட்டங்களுக்கான செலவினங்கள் 11 சதவீதம் வெட்டப்பட்டிருக்கிறது. உணவு மானி யங்கள், வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த நடவடிக்கைகளுக்கான திட்டங்கள், வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சித் திட்டங்கள், சமூக நலத் திட்டங்கள், எரிசக்தித் திட்டங்கள் போன்ற மத்திய அரசின் நிதி உதவித் திட்டங்களுக்கு 4.5 சதவீதம் வெட்டப்பட்டிருக்கிறது. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புச் சட்டத்தின் கீழான திட்டத்திற்கான தொகை 71 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 61,500 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டிருக்கி றது. இதனுடன் ரசாயன உர மான்யங்கள் வெட்டும் சேர்ந்துகொள்கிறது.

பிரதமரின் பெயரால் தம்பட்டம் அடிக்கப் பட்ட அயுஷ்மான் பாரத், ஸ்வச் பாரத் மற்றும் பிஎம்-கிசான் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளி லும் பெரிய அளவில் வெட்டு விழுந்திருக்கிறது. தலித்/பழங்குடியினருக்கான நலத்திட்டங்க ளுக்கு ஏற்கனவே கணிசமான அளவிற்கு ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருந்த்து. இப்போதும் அதேபோன்று வெட்டப்பட்டு தேக்கநிலை யிலேயே இருப்பதைக் காட்டுகிறது. நிதியமைச்சர், வரி விதிப்புகளைப் பொறுத்தவரை, கார்ப்பரேட் துறைக்கும், பணக்காரர்களுக்கும் மேலும் பல சலுகை களை அறிவித்திருக்கிறார். (நாட்டில் உள்ள 1 சதவீத பணக்காரர்கள், நாட்டில் அடித்தட்டில் உள்ள 70 சதவீதத்தினரின் – அதாவது 100 கோடி மக்களின் - செல்வத்தைப் போல் நான்கு மடங்கு பெற்றிருக்கிறார்கள் என்று வந்துள்ள நிலையில்தான்) இவ்வாறு சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறார். ஏற்கனவே அரசு அளித்த சலுகைகள் காரணமாகத்தான், கார்ப்பரேட் வரிகளில் 1.55 லட்சம் கோடி ரூபாய் வீழ்ச்சி ஏற்பட்டது. இவற்றின் விளைவாக அரசு, தனக்குத் தேவையான வளங்களை பொதுத்துறை நிறு வனங்களைத் தனியாரிடம் தாரை வார்ப்பதன் மூலஇம, 2019-20 திருத்திய மதிப்பீட்டின்படி 65 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது, தற்போது 2020-21இல் 2 லட்சத்துப் 10 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்திட திட்டமிட்டி ருக்கிறது. இது 62 ஆயிரம் கோடி ரூபாய் மூல தனச் செலவினங்கள் தொகையை ஈடுகட்டு வதை விட அதிகமாகும். இத்தகைய விரக்தியின் வெளிப்பாடுதான் அரசாங்கத்தை எல்ஐசி-யின் பங்குகளையும் தனியாருக்குத் தாரை வார்த்திட இட்டுச் சென்றிருக்கிறது.

2020-21க்கான செலவினங்கள், சென்ற ஆண்டின் பட்ஜெட் விவரங்களைவிட 9.2 சதவீதம் மட்டுமே அதிகமாகும். பெயரள விலான மொத்த உள்நாட்டு உற்பத்தி 10 சத வீதம் உயர்வு பெற்றிருக்கும் என்று கொண்டா லும்கூட இத்தொகை அதைவிடக் குறைவான தாகும். கடந்த சில ஆண்டுகளின் ஆட்சியா ளர்கள் மேற்கொண்டுவரும் ஆட்சியின் அனு பவத்திலிருந்து இத்தொகைகூட செலவிடப் படுமா என்பது சந்தேகமே. இவ்வாறு, மத்திய பட்ஜெட்டானது, பொரு ளாதார மந்தத்தை சரிசெய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எதையும் எடுப்ப தற்குப் பதிலாக, மக்களின் தேவையின் அடிப்படையில் உருவாகியுள்ள பிரச்சனையை மேலும் அதிகப்படுத்தும் விதத்திலேயும், பொருளாதார நெருக்கடியை மேலும் ஆழமான முறையில் விரிவுபடுத்தும் விதத்திலேயும் அமைந்திருக்கிறது.

நம் நாட்டின் சொத்துக்கள் மிகப்பெரிய அளவில் விற்பதற்கு எதிராகவும், எல்ஐசி மற்றும் இன்சூரன்ஸ் துறைகளைத் தனியாரி டம் தாரை வார்ப்பதற்கு எதிராகவும், வேலை யின்மை, விவசாய நெருக்கடி மற்றும் நாட்டின் பெரும்பான்மை மக்கள் மீது நாளும் அதிகரித்து வரும் துன்ப துயரங்களுக்கு எதிராகவும் கிளர்ச்சிப் போராட்டங்களை உக்கிரப்படுத்த வேண்டும் என்று நாட்டு மக்கள் அனைவரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.            (ந.நி.)