tamilnadu

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

காஷ்மீர் கொடியை அகற்றிய பாஜக தலைவர்
ஸ்ரீநகர்:

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்யும் தீர்மானம் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் ஜம்மு - காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, காஷ்மீர் முன்னாள் துணை முதல்வரும், பாஜக தலைவருமான நிர்மல் சிங் தனது வாகனத்தில் பொருத்திருந்த காஷ்மீர் கொடியை அகற்றியுள்ளார். 

ஹைதராபாத் அசாமிலும் 144 உத்தரவு
ஹைதராபாத்:

காஷ்மீருக்கான 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து ஹைதராபாத் பல்கலைக்கழகம், அசாம் மாநிலத்தில் உள்ள ஹாலாசண்டி மாவட்டத்திலும் 144தடை போடப்பட்டுள்ளது. ஜம்மு -காஷ்மீர் விவகாரம்மற்றும் பக்ரீத் பண்டிகை ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆதரவா, எதிர்ப்பா?
கொல்கத்தா:

370-ஆவது சட்டப்பிரிவை நீக்குவதற்கான மசோதா மீது நடைபெற்ற வாக்கெடுப்பில், கலந்துகொள்ளாமல் திரிணாமுல் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். இது விமர்சனத்திற்கு உள்ளானது. வெளிநடப்பு என்பதே மறைமுகமாக மசோதாவை ஆதரிப்பதுதான் என்று என்று கூறப்பட்டது. இதற்கு விளக்கம் அளித் துள்ள திரிணாமுல் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி,“வெளிநடப்பு செய்வதால் நாங்கள் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை ஆதரிக்கிறோம் என்று அர்த்தமல்ல.நாங்கள் மசோதாவை முற்றிலும் எதிர்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.