புதுதில்லி:
இந்தியாவின் ஏற்றுமதி - இறக்குமதி கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத சரிவைச் சந்தித்து இருப்பதாக வர்த்தக அமைச்சக புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.இதன்படி, இந்தியாவில் இருந்து அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 30 முக்கியமான பொருட்களில்,8 பொருட்கள் தவிர மற்ற அனைத்தின் ஏற்றுமதியும் கடுமையாக சரிந்துள்ளது. செப்டம்பர் மாத ஏற்றுமதி, இறக்குமதியை கணக்கில் எடுத்தால்,அது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் இந்தியா வின் ஏற்றுமதி 6.57 சதவிகிதம் குறைந்தது, 2,600 கோடி டாலராக உள்ளது. இறக்குமதி 13.9 சதவிகிதம் வீழ்ந்து 3,690 கோடி டாலராக உள்ளது.ஏற்றுமதியைப் பொறுத்தவரை, நவரத்தினங்கள் மற்றும் ஆப ரணங்கள் 5.56 சதவிகிதம், ரசாயனங்கள் 3.5 சதவிகிதம், இன்ஜினியரிங் பொருட்கள் 6.2 சதவிகிதம், ரெடிமேட் ஆடைகள் 2.2 சதவிகிதம், பெட்ரோலியப் பொருட்கள் 18.6 சதவிகிதம் என்ற அளவிற்கு சரிவைக் கண்டுள்ளன.இறக்குமதியை எடுத்துக்கொண் டால், நிலக்கரி 24 சதவிகிதம், பெட்ரோலியம் 18.3 சதவிகிதம், ரசாயனம் 16.2 சதவிகிதம், பிளாஸ்டிக் பொருட்கள் 10.7 சதவிகிதம், ராசிக்கற்கள் 17.3 சதவிகிதம், இரும்பு மற்றும் ஸ்டீல் 14.6சதவிகிதம், எலக்ட்ரானிக் பொருட் கள் 0.14 சதவிகிதம் என சரிவைச் சந்தித்துள்ளன.மிகப்பெரிய அளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாடாக நீண்டகாலமாக இந்தியா உள்ளது. பட்ஜெட்டில் அதன் மீதான வரி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது தங்கம் இறக்குமதியும் குறைந்துள்ளது.
செப்டம்பரில் மட்டும் தங்கம் இறக்குமதி 50.82 சதவிகிதம் குறைந் திருக்கிறது.மின்சாதனம் (22 சதவிகிதம்), மருந்துப் பொருட்கள் (8.7 சதவிகிதம்) ஏற்றுமதி மட்டுமே சற்று உயர்ந்துள்ளது. இவ்வாறு இந்தியாவின் ஏற்று மதி - இறக்குமதி சரிவைச் சந்தித்து வரும் நிலையில், “இப்பிரச்சனையில் மத்திய அரசு உடனடியாக தலை யிட்டு, வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையைச் சீரமைக்க வேண்டும்” என்று லூதியானாவைச் சேர்ந்த ஏற்றுமதியாளரான எஸ்.சி. ரத்தன் என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார்.“தாமதம் ஆக ஆக ஏற்றுமதியின் சரிவு கட்டுப்பாட்டை மீறிச்செல்லும் அபாயம் உள்ளது; மேலும்,இவ்வாறு ஏற்றுமதி குறைவது ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை கடுமையாகப் பாதிக்கும்” என்றும் ரத்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.