லாஸ் ஏஞ்சல்ஸ்:
2019-ஆம் ஆண்டின், சிறந்த நடிகருக்கான ‘ஆஸ்கர்’ விருதை வென்றிருப்பவர், ஜாக்குயின் பீனிக்ஸ் ஆவார்.விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிபெற்ற ஹாலிவுட் படமான ‘ஜோக்கர்’ படத்தில் நடித்ததற்காக இந்த விருதை ஜாக்குயின் பீனிக்ஸ்பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஞாயிறன்று நடைபெற்றது. அப்போது, விருதைப் பெற்றுக்கொண்ட ஜாக்குயின் பீனிக்ஸ், விழா மேடையில் சிறப்பான அரசியல் உரை ஒன்றை நிகழ்த்தி உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார். “எனக்கு இப்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. சிறந்த நடிகருக்காக என்னுடன் பரிந்துரைக்கப்பட்ட சக நடிகர்களுக்கும் அல்லது இந்த அரங்கில் உள்ள எவருக்கும் மேலானவனாக நான் என்னை உணரவில்லை, ஏனென்றால் நாங்கள் ஒரே அன்பைப் பகிர்ந்து கொள்கிறோம், அதுதான் படத்தின் மீதுள்ள எங்கள் காதல். இதுபோன்ற வெளிப்பாடு எனக்கு அசாதாரண வாழ்க்கையை அளித்துள்ளது. அந்தவெளிப்பாடு இல்லாமல், நான் எங்கே இருப்பேன் என்று எனக்குத் தெரியாது. இது எனக்கு வழங்கப்பட்ட மிகப் பெரிய பரிசு என்று நான் நினைக்கிறேன். குரலற்றவர்களுக்காக தங்கள் குரலைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பாக சினிமாவைக் கருதுகின்றனர்.
இந்நிலையில், நாம் கூட்டாக எதிர் கொண்டுள்ள சில துன்பகரமான சிக்கல்களைப் பற்றி நான் பேச விரும்புகிறேன்.நாம் எல்லோரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட முறையில் பல மோசமான விஷயங்களை எதிர்கொண்டு வருகிறோம். பொதுவாக அநீதிக்கு எதிரான போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம். அவற்றைப் பற்றிப் பேசஇது சரியான நேரம் என்று கருதுகிறேன்.ஏனென்றால், நாம் எல்லோரும் இந்தப்பிரச்சனைகளை ஒன்றாக அனுபவிக்கிறோம் என்பதால், இதை நாம் ஒன்றாகசேர்ந்துதான் எதிர்கொள்ள வேண்டியது இருக்கிறது.பாலின ரீதியான துன்புறுத்தல்கள் இப்போதும் நிகழ்ந்து வருகின்றன. மதரீதியான துன்புறுத்தல்கள் நடக்கின்றன.நிற ரீதியாக, மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர். பாலினத் தேர்வு காரணமாகமக்கள் இப்போதும் புறக்கணிக்கப் படும் நிலை இருந்து வருகிறது. பழங்குடிமக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. விலங்குகள் துன்புறுத்தப்படுகின்றன. இதை எல்லாம் நாம் எதிர்த்துப் போராடிக்கொண்டு இருக்கிறோம்.
முக்கியமாக, ‘ஒரே நாடு ஒரே மதம்’என்பதை நாம் எதிர்க்கிறோம். ஒரே நாடு,ஒரே மதம், ஒரே இனம், ஒரே மக்கள், ஒரே பாலினம்தான் உலகை ஆள வேண்டும். மக்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஒரு கொள்கை இருக்கிறது. இந்தகொள்கைக்கு எதிராக நாம் போராடும் நேரம் வந்துவிட்டது. இந்த கொள்கை கொண்டவர்கள் மற்றவர்களை மதிப்பதுஇல்லை. நாம்தான் உலகின் மையம் என்று சிலர் நினைக்கிறார்கள். அதை எதிர்த்துப் போராட வேண்டிய நிலை தற்போது உருவாகி உள்ளது.நாம் இயற்கையை சூறையாடுகிறோம். இயற்கை வளங்கள் அனைத்தையும் நாம் எடுத்துக் கொள்கிறோம். ஆனால் இயற்கைக்கு நாம் எதுவும் கொடுப்பது இல்லை. நாம் அதிக அறிவுமிக்கவர்கள். நாம் இயற்கையை காக்க முடியும். நாம் இயற்கைக்கு அன்பை கொடுக்க முடியும். இந்த அறையில் பலர் எனக்கு பலமுறை வாய்ப்பு வழங்கி உள்ளனர். இப்படிப்பட்டதுதான் வாழ்க்கை. நாம் பிறருக்கு உதவ வேண்டும். எல்லோரும் முன்னேற உதவ வேண்டும். இதுதான் மனித நேயம். இதுதான் வாழ்க்கை. இவ்வாறு ஜாக்குயின் பீனிக்ஸ் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார். இவர் அமெரிக்கர் ஆவார்.