புதுதில்லி:
தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தை, குடியரசுத் தலைவர் மாளிகை அருகே இடமாற்ற வேண்டும் என்று, குஜராத்தைச் சேர்ந்ததனியார் காண்ட்ராக்ட் நிறுவனம் கூறியுள்ளது.தலைநகர் தில்லியில் லோக் கல்யாண் மார்க் என்ற இடத்தில் பிரதமர் இல்லம் தற்போது அமைந்துள்ளது. இதனைத்தான் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அருகில், டல்ஹெளசி சாலைக்கு மாற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.புதிய நாடாளுமன்றக் கட்டுமானப் பணியை காண்ட்ராக்ட் எடுத்துள்ள - குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த எச்.சி.பி. டிசைன் (HCPDesign) என்ற நிறுவனமே இந்த யோசனையை வழங்கியுள்ளது. மேலும், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் தற்போதைய நாடாளுமன்றக் கட்டடத்தின் அருகிலேயே அமைக்கலாம் என்றும்நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பின்புறம் புதிய கட்டடத்தை எழுப்புவதற்குப் போதிய இடம்உள்ளது என்றும் எச்.சி.பி. நிறுவனம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.எனினும், பிரதமர் இல்ல மாற்றம் உள்ளிட்டவை குறித்து விரிவான ஆலோசனைக்குப் பின்பே முடிவு செய்யப்படும் என நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.