புதுதில்லி, செப். 8- தேசமே உற்றுநோக்கிய தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் இடதுசாரி மாணவர் கூட்டணி அனைத்து இடங்களையும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் கைப்பற்றியுள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் எய்ஷி கோஷ் ஆயிரம் வாக்குகளுக்கும் அதிக மாக முன்னிலை பெற்று தலைவராக தேர்வு பெற உள்ளதாக தகவல் வெளி யாகி உள்ளது. துணைத்தலைவர் சாகேத் மூன் (டிஎஸ்எப்), 1800க்கும் அதிக வாக்குகளுடன் முன்னிலை பெற்றார். பொதுச் செயலாளராக சதீஷ் சந்திரயாதவ் (ஐசா) ஆயிரத்து க்கும் அதிக வாக்குகள் முன்னிலை பெற்றார்.இணைசெயலாளராக முகமது டேனிஷ் (ஏஐஎஸ்எப்) 1600 வாக்குகள் முன்னிலையிலும்உள்ளார். பாஜகவின் ஏபிவிபியை சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த வழக்கில் தேர்தல் முடிவுகளை செப்டம்பர் 17 வரை வெளியிட தில்லி உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது. அதன் காரணமாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. வெள்ளியன்று நடந்த பேரவைத் தேர்தலில் 5762 மாணவ- மாணவியர் வாக்களித்தனர். வாக்கெடுப்பை தாமதப்படுத்த பல்கலைக்கழக அதிகாரிகள் முயன்ற னர்.