பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்களுக்கு எதிரான மாபெரும் போராட்டத்திற்கு கட்டியம் கூறும் ஒரு போராளியின் கால்கள் இவை. ஒரு கயவனால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, நான்கு வயது குழந்தையோடு நீதிக்காக இன்றும் போராடிக் கொண்டிருக்கும் வீராங்கனை இவர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பல்லாயிரக்கணக்கான போராளிகளோடு தன்னையும் இணைத்துக் கொண்டவர். தனக்கு நேர்ந்த துயரம் யாருக்கும் நேரக்கூடாது, அதற்கு அரசே பொறுப்பு என முழக்கமிட்டு திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்ட மாதர் சங்க நடைபயணத்தில் பாதங்கள் கொப்பளிக்க, உள்ளத்தில் ஆவேசம் பொங்க வீரநடை போட்ட மகத்தான தோழர் இவர்.
படம், செய்தி : எஸ்.கே.பொன்னுத்தாய்