tamilnadu

img

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு துவக்கவிழா

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழாவையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டக்குழு அலுவலகத்தில் வியாழனன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஹன்னன் முல்லா செங்கொடியை ஏற்றி வைத்தார் . மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. கனகராஜ் மரக்கன்றை நட்டு வைத்தார். மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ,மாநகர் மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இரா.தெய்வராஜ், அ.ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.