புதுதில்லி:
மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் பாஜக செல்வாக்கு சரிந்திருப்பதையே சட்டப்பேரவைத் தேர்தல்முடிவுகள் காட்டுவதாக எதிர்க்கட்சி களும், இது மாபெரும் வெற்றி என்று பாஜக உள்ளூர் தலைவர்களும் கூறி வருகின்றனர்.ஆனால், மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் கிடைத்திருப்பது அவ்வளவு பெரிய வெற்றியில்லை என்பதை பிரதமர் நரேந்திர மோடியே சூசகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.“இப்போதெல்லாம் மீண்டும் ஆட்சியை தக்க வைப்பது என்பதே பெரிய விஷயம். சிலருக்குத்தான் அந்த பாக்கியத்தை மக்கள் தருகிறார்கள்” என்று மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலசட்டப்பேரவைத் தேர்தல் முடிவு குறித்துபிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். “ஐந்து ஆண்டு காலம் ஆட்சியில் இருக்கும் ஒரு அரசு மீண்டும் ஆட்சியில் நீடிப்பது என்பது இப்போது அருகிவிட்டது. அப்படிப்பட்ட நிலையில் இந்தவெற்றி என்பது மிகப் பெரியது. மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸூம், ஹரி யானா முதல்வர் கட்டாரும் கடுமையாக உழைத்ததால்தான் அவர்களுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது. அவர்களைப் பாராட்ட வேண்டும்” என்றும் மீசையில் மண் ஒட்டாத கதையாக பிரதமர் மோடி சமாளித்துள்ளார்.