தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேசெம்பனார்கோவில் 03-மேலையூரை சேர்ந்தவர் கணபதி. 81 வயதான இவர், தமிழர் பாரம்பரிய கலைகளான சிலம்பம், முத்து விளையாட்டு, பிடி, சுருள்கொம்பு உள்ளிட்ட வீர விளையாட்டுகளை ஏராளமான இளைஞர்கள், சிறுவர்களுக்கு இலவசமாக கற்று தருகிறார். இதுவரை ஆயிரம் பேருக்கும் மேல் கற்றுத் தந்திருக்கிறார்.இதுபற்றி அவர் கூறும்போது, இந்த கலைகள் எல்லாம் பிறரிடம் சண்டை போடுவதற்காகஅல்ல. தன்னம்பிக்கையும், துணிச்சலையும் நம்மில் வரவழைக்கும் உணர்வோடு கலந்தவை. உடற்பயிற்சியாக தான் பார்க்க வேண் டுமே தவிர பெரிய வீரன் என இருக்க கூடாது. தமிழர் கலைகள் தற்போது பல பகுதிகளில் காணாமல் போனதோடு, பயிற்றுவிக்கவும் ஆளில்லாத அவல நிலை ஏற்பட்டு விட்டது. எதிர்கால தலைமுறைகளுக்கு கற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் தமிழர் வீர கலைகளும் காப்பாற்றப்படும். மேலும் அக்கலைகளை கற்றுத் தேர்ந்த பயிற்றுநர்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவ வேண்டும் என கணபதி கோரிக்கை விடுத்துள்ளார்.