tamilnadu

img

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு இனி கிடையாது? மத்திய நிதிச்செயலாளர் சூசகம்

புதுதில்லி:
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு என்ற பெயரில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட் டத்தை, கடந்த 2017ஆம் ஆண்டு அவசர கதியில் மத்திய அரசு கொண்டு வந்தது. இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசே ஈடுகட்டும் என்றுஅப்போது உறுதியளித்தது.

இரண்டு நாட்களுக்கு முன்பாக கூட, 2020 மார்ச் மாதத்துக்கான இழப்பீடு ரூ. 13 ஆயிரத்து 806 கோடியையும் சேர்த்து 2019-20 ஆம் நிதியாண்டுக்கு ரூ. 1 லட்சத்து 65 ஆயிரம் கோடியை மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப் பீடாக வழங்கி இருக்கிறோம் என்று மோடி அரசு கூறியிருந்தது.இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டவருவாய் சரிவினால் மாநிலங்களுக்குச் சேர வேண்டிய ஜிஎஸ்டி பங்கை மத்திய அரசால் கொடுக்க முடியவில்லைஎன்று நிதித்துறை செயலாளர் அஜய்பூஷண் பாண்டே, பாஜக எம்.பி. ஜெயந்த்சின்ஹா தலைமையிலான நாடாளுமன்ற நிதி நிலைக்குழுவில் பேசியதாகசெய்திகள் வெளியாகியுள்ளன.“மாநில அரசுகளுக்கு அளிக்கும்இழப்பீடு குறித்து மறு வரையறை செய்ய ஜிஎஸ்டி சட்டத்தில் இடமிருக்கிறது; அதாவது, வருவாய் ஒரு மட்டத்துக்குக் கீழே சென்று விட்டால் மாநிலங்களுக்கு இழப்பீட்டை எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதை மறு வரையறை செய்யமுடியும்” என்று அவர் கூறியுள்ளார்.அஜய் பூஷண் பாண்டே தனது பேச்சு மூலம், கொரோனாவைக் காரணம் காட்டி, ஜிஎஸ்டி இழப்பீட்டிலும் மோடி அரசு கைவைக்கத் திட்டமிட் டுள்ளதை வெளிச்சம் போட்டுள்ளார்.