புதுச்சேரி, அக்.16- குறைந்தபட்ச ஊதியம் ரூ.26ஆயிரம் அறிவிக்கக்கோரி புதுச்சேரியில் அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில் தர்ண போராட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து பகுதிநேர தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரில் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் பிரேமதாசன் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் சி.எச்.பாலமோகனன்துவக்கி வைத்து பேசினார். பொதுச் செயலாளர் கே.ராதாகிருஷ்ணன்,நிர்வாகிகள் ரவிச்சந்திரன், கிறிஸ்தோபர், மோகனகிருஷ்ணன், ஞானசேகர்,கீதா உள்ளிட்ட பலர் பேசினர்.