tamilnadu

img

கொரோனா எனும் இருண்ட மேகங்களுக்கிடையில் புன்னகைக்கும் செய்தி...

பாரபங்கி:
உத்தரப்பிரதேச மாநிலம் பராபங்கியில் புதன்கிழமை கர்ப்பிணிப் பெண் ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.

கொரோனா என்ற இருண்ட மேகங்களுக்கிடையே மகிழ்ச்சியளிக்கூடிய செய்தியாக இது உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பராபங்கி ராம் நகர் பகுதியில் உள்ள குதுல்பூர் கிராமத்தில் வசிப்பவர் குண்டன் கவுதம். இவர் தனது மனைவியை பிரசவத்திற்காக புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதித்தார். அவருக்கு  இரண்டு ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகள் என ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன. குழந்தைகளும், தாயும் நலமாக உள்ளனர்.

இது குறித்து குண்டன் கவுதம் கூறுகையில், "எனது மனைவிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் எனக் கூறினார்கள். ஆனால் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன. ஐந்து குழந்தைகளும் கடவுள் அளித்த பரிசு என்றார்".