புதுதில்லி:
தில்லியில் நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவில் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் சார்பில் 32 அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தன. அதுபோல மத்திய அரசுத் துறைகள் சார்பிலும் 24 வகையான அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி கோரப் பட்டிருந்தன.
ஆனால், 16 மாநில அலங்கார ஊர்திகள், 6 மத்திய அரசுத்துறை ஊர்திகள் எனமொத்தம் 22 அலங்கார ஊர்திகளுக்கு மட்டுமேதற்போது வழங்கப் பட்டுள்ளது.இதில் எதிர்க்கட்சிகள் ஆளும் கேரளா, மேற்குவங்கம், மகாராஷ்டிரா மாநி லங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன. அதுமட்டுமன்றி, 2020 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் நீடி க்குமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி வரும் ஐக்கிய ஜனதாதளத்தையும் சோதனைக்கு மோடி அரசு உள்ளாக்கியுள்ளது. ஐக்கிய ஜனதாதளம் ஆட்சியிலிருக்கும் பீகார் மாநிலத் திற்கும் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.குடியுரிமைச் சட்ட எதிர்ப்பில் காட்டும் உறுதியேஅலங்கார ஊர்தி அணிவகுப்பில் கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு காரணமாக கூறப்படுகிறது. அதேபோல சிவசேனா தலைமையில் ஆட்சி யமைந்ததை பாஜக-வால் இப்போது வரை சகிக்கமுடியாததன் எதிரொலி யாகவே, மகாராஷ்டிர மாநிலத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.