tamilnadu

50 லட்சம் அங்காடிகள் சில்லறை வணிகர்களை ஒழித்துக்கட்ட ரிலையன்ஸ் மெகா திட்டம்

புதுதில்லி, மே 12-கார்ப்பரேட் பெரு முதலாளி முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான 15 ஆயிரம் ரிலையன்ஸ் அங்காடிகள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. இந்நிலையில், ஆன்-லைன் வர்த்தகத்தை விரிவாக மேற்கொள்ள முடிவு செய்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம் சில்லரை வியாபாரிகளை விழுங்கி தங்கள் நிறுவனத்துடன் இணைத்துக் கொள்ள முடிவு எடுத்துள்ளது. தற்போது நாடு முழுவதும் இயங்கி வரும் 15 ஆயிரம் ரிலையன்ஸ் அங்காடிகளை (ரிலையன்ஸ் ஃப்ரஷ் மளிகை கடைகள் போன்றவை) 2023-ல் 50 லட்சம் அங்காடிகளாக உயர்த்ததிட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் மெரில் லின்ச் வங்கிவெளியிட்டுள்ள விவரத்தின் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான வர்த்தக மையங்கள்(பலசரக்கு மற்றும் சில்லரை பொருட்கள் விற்பனை) அனைத்தும் அமைப்புசாராதவை. இந்த சில்லரை வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் தங்களது வியாபாரத்தை தொழில்நுட்ப ரீதியில் உயர்த்தி, நவீனமயமாக்க முயற்சிக் மேற்கொண்டிருக்கின்றன.இதில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுஅறிவித்த ஜிஎஸ்டி முக்கிய பங்கு வகிக்கிறது. அனைத்துவிற்பனை நிறுவனங்களும் ஜிஎஸ்டி வரியை கடைப்பிடிக்க வேண்டுமென மத்திய பாஜக அரசு அறிவித்ததன் விளைவாக,அனைத்து நிறுவனங்களும் நவீனமயமாக்கப்பட வேண்டியநிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. இதனால் சில்லரை வணிகர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தியாவில் 15 ஆயிரம் விற்பனை அங்காடிகள் மூலம்தடம் பதித்த, ரிலையன்ஸ் நிறுவனம், அனைத்து துறைகளிலும் தன்னை முன்னிலைப்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.தொலைத் தொடர்பு துறையில் ஆதிக்கத்தை செலுத்திவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘ஜியோ’ 4ஜி இணைய வசதிமூலம் அனைத்துத் தரப்பு மக்களையும் அடிமையாக்க முயற்சித்து வருகிறது. இதனை பயன்படுத்தி, அருகில் உள்ளசில்லரை மளிகைக் கடைகளை தொடர் கொண்டு, அவர்களதுவாடிக்கையாளர்களுக்கு தேவையானவற்றை ஜியோவின் ‘மொபைல் விற்பனை மையம்’ (ஆஞடிளு) மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.


ஜிஎஸ்டி ரசீது பெறுவது உட்பட வியாபாரத்தை நவீனமயமாக்குவதற்கு தேவையான பிஓஎஸ் (Point Of Sale System) கருவியை வாங்குவதற்கு, ரிலையன்ஸ் நிறுவனம் SnapBizz, Nukkad Shops மற்றும் GoFrugal ஆகிய மென்பொருள் விற்பனை நிலையத்தை அணுக முடிவு செய்துள்ளது.தற்போது இந்தியாவில் மிகப்பெரும் ஜவுளிக் கடைகள்,டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் உட்பட பல்வேறு மிகப்பெரும் வர்த்த நிறுவனங்களில் இந்த பிஓஎஸ்(POS) கருவி பயன்படுத்தப்படுகிறது. இதை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு, ரிலையன்ஸ் நிறுவனம் மொபைல் முனையில்விற்பனை (mobile point-of-sale) என்ற முறையில் விற்பனையை மேற்கொள்ள முயற்சி மேற்கொண்டுள்ளது. ‘கத்தி முனையில் கொள்ளை’ என்பது போன்றதுதான் இது.கடைக்கே செல்லாமல், மொபைலில் உள்ள ஜியோ ஆப்மூலம், ரிலையன்ஸ் நிறுவனத்தால் இணைக்கப்பட்ட மளிகைக் கடைகளில் மட்டும் பொருள் வாங்க வைப்பது இதன் நோக்கம் ஆகும். இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ செல்போன் சேவையையும், பொருட்கள் விற்பனையையும் பெருக்கி, கொள்ளை லாபம் அடிக்க உள்ளது. POS கணினிக்கு மேற்கண்ட மூன்று மென்பொருள் விற்பனை நிலையங்களும் ஒவ்வொரு விலையை நிர்ணயம் செய்துள்ளன. இதில், அம்பானியின் நிறுவனம் ஸ்னாப்பிஸ்(SnapBizz)-ஐ தொடர்பு கொண்டுள்ளது. மத்திய பாஜக அரசு பணமதிப்பு நீக்கம் என்ற அறிவிப்பை வெளியிட்ட பிறகு, சிறு-குறு தொழில்கள் அனைத்தும்அழிந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், பாஜகவின் ஆட்சிக்காலம் முடியும் நிலையில் கூட, மோடியின் நெருங்கியநண்பரான முகேஷ் அம்பானி தன் லாபத்தை மேலும் அதிகரிக்க முயல்கிறார். இதனால் பாதிக்கப்படுவது சிறு, குறு,நடுத்தர தொழில்களும், அதனைச் சார்ந்த ஏழை மக்களும்தான்.       

        (பிடிஐ)