tamilnadu

img

வரி விதிப்பிலும் பிராந்திய பாகுபாடா?

புதுதில்லி:
சப்பாத்திக்கு 5 சதவிகிதத் தோடு நிறுத்தி விட்டு, புரோட்டாவுக்கு மட்டும் மத்திய பாஜக அரசு18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புரோட்டா, சப்பாத்தி ஆகியஇரண்டுமே மைதா மாவிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. அவற் றைச் சமைக்கும் முறைதான் மாறுபடுகிறது. அப்படியிருக்க, புதியஜிஎஸ்டி வரி விதிப்பில், புரோட்டாவுக்கு 18 சதவிகிதம், சப்பாத்திக்குமட்டும் ஏன், 5 சதவிகிதம்? என்றுகேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.பெங்களூரு வைட்பீல்ட் பகுதியைச் சேர்ந்த ஐடி பிரெஷ் ஃபுட்(ID Fresh Food) என்ற ரெடிமேட் உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனம் இதுகுறித்து, மத்திய அரசின் முறையீட்டு ஆணையத்திடம்(Authority for Advance Rulings)வழக்கு தொடர்ந்தது. அதன் முடிவிலும், “புரோட்டாஎன்பது, 18 சதவிகித வரி விதிக்கப்படும் உயர்தர உணவு வகைகளில் ஒன்று எனவும், அது 5 சதவிகித வரி வசூலிக்கப்படும் சப்பாத்தி மற்றும் ரொட்டி வகைகளில் சேராது” எனவும் தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. இது உணவு தயாரிப்பு நிறுவனங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இதையொட்டி, வட இந்தியஉணவுப் பொருளான சப்பாத்திக்கு 5 சதவிகித வரி விதித்தமத்திய பாஜக அரசு, தென்னிந்திய மக்கள் விரும்பி உண்ணும் புரோட்டாவுக்கு 18 சதவிகித வரியை விதித்திருப்பது, பிரதேசஅடிப்படையிலான பாரபட்சம் மற்றும் பழிவாங்கல் நடவடிக்கை எனவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.