tamilnadu

img

கணக்கெடுப்புக்கு மறுத்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை... அரசு ஊழியர்களுக்கு மோடி அரசு மிரட்டல்

புதுதில்லி:
மக்கள் தொகை கணக்கெடுக் கும் பணியில் ஈடுபட மறுக்கும் அரசுஊழியர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிப்பது மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனினும், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும்தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், ஏப்ரல் மாதம் முதல், வீடு, வீடாகச் சென்று செப் டம்பருக்குள் கணக்கெடுப்பை நடத்தி முடிக்கவும், இந்தப் பணியில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை ஈடுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.

ஆனால், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடமாட்டோம் என கேரளா, மேற்குவங்கம் மற்றும் காங்கிரஸ் ஆளும் பஞ்சாப், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள் ஏற்கெனவே அறிவித்துவிட்டன.இந்நிலையில், 2003-ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் மற்றும் குடியுரிமை சட்டத்தின் படி தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பு பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபடவேண்டும். வீடுதோறும் சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு உதவ வேண்டும்.மாறாக, அப்பணியில் ஈடுபட மறுக்கும் மாநில அரசு ஊழியர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண் டனை மற்றும் ரூ. 1000 வரை அபராதம் விதிப்பது பற்றி ஆலோசிக்கப்படுவதாக மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.