tamilnadu

img

நான் பாஜக ஆதரவாளன்தான்... நடிகை தீபிகா படுகோனே-வையும் மிரட்டிய ராம்பக்த் கோபால்

புதுதில்லி:
தில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப் பாக்கிச் சூடு நடத்திய ராம்பக்த் கோபால்,பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே-வுக்கும் முகநூலில் கொலைமிரட்டல் விடுத்திருந்தது தெரியவந்துள்ளது.ராம்பக்த் கோபாலின் பின்னணி குறித்து, போலீசாரின் விசாரணை எப்போது முடியும்.. என்றைக்கு அவர்கள்தங்களுக்கு கிடைத்த தகவல்களை நீதிமன்றத்தின் முன்பு வைப்பார்களோ தெரியாது. ஆனால், ராம்பக்த் கோபாலின் முகநூல், அவர் எந்தளவிற்கு இந்துத் துவ பயங்கரவாதியாக செயல்பட்டு வந்துள்ளார் என்பதற்கான ஆதாரங்களாக மாறியிருக்கின்றன.

19 வயதான ராம்பக்த் கோபால், ஆர்எஸ்எஸ் பரிவாரங்களில் ஒன்றானபஜ்ரங் தள் அமைப்புடன் நெருங்கியதொடர்பு கொண்டவராக இருந்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் சார்தா பல்கலைக்கழகத்தில் ஆப்கானிஸ்தான் மாணவர்களை தாக்கிய வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட தீபக் சர்மா. இவருடன் புகைப்படம் ஒன்றில் ஒன்றாக காட்சி தரும் கோபால், அதையே முகப்பு புகைப்படமாகவும் வைத்துள்ளார். புகைப்படங்கள் பலவற்றிலும் அவர் துப்பாக்கியுடனே காட்சி அளிக்கிறார்.அமித் ஷாவிற்கு ஆதரவான கருத் துக்களையே தொடர்ந்து முகநூலில் பதிவிட்டு வந்துள்ளார். தேர்தல் நடப்பதற்குமுன்னதாகவே, பாஜக தலைவர் மனோஜ் திவாரியை, தில்லி முதல்வர் என்று குறிப்பிட்டுள்ளார். 

நான் பாஜக ஆதரவாளர்தான். எனக்கு நாடுதான் முதலில். பிறகுதான் கட்சியும் கட்சி தலைவர்களும் என்று ஜனவரி 11-ஆம் தேதி பதிவிட்டுள்ளார். அந்த வகையில், தில்லி ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே போராட்டத்தில் பங்கேற்ற புகைப்படத்தை பதிவிட்டு, “தீபிகா.. உனக்கு செம அடி இருக்கு.. பக்தாக்கள் தயாராக உள்ளனர்; உனது படம் மட்டுமல்ல, சல்மான் கானின் படமும், போட்ட பணத்தை எடுக்காது” என்றும்ராம்பக்த் கோபால் மிரட்டல் விடுத்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.அய்ஷா கோஷை சந்தித்த தீபிகா, 2019 புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் வீட்டிற்கு செல்லாதது ஏன்? என்றும் பதிவு ஒன்றில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.