புதுதில்லி:
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தமானது? என்ற வழக்கை, உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.இந்த விசாரணையின் ஒரு பகுதி யாக, “ராமரின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இப்போது அயோத்தியில் வசிக்கிறார்களா?” என்று கடந்த வாரம்உச்சநீதிமன்றம் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தது. ஒரு ஆர்வத்திலேயே இந்த கேள்வி கேட்கப்பட்டு இருந்தது.ஆனால், ராமரின் வம்சாவளி நாங்கள்தான் என்று ஒருவருக் கொருவர் போட்டிபோட ஆரம்பித்துவிட்டனர்.
முதலில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும், பாஜக பெண் எம்.பி.யுமான தியா குமாரி, தன்னை “ராமரின் வம்சாவளி” என்று கூறினார். ராமரின் மகன் குஷாவின் வழியில் வந்தவர்கள் என்று குறிப்பிட்டார்.
மறுநாளே, மேவார் - உதய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மகேந்திர சிங் என்பவரும், ராமருக்கான வாரிசுப் போட்டியில் இறங்கி, “நான் தான் கடவுள் ராமரின் 232-ஆவது வாரிசு. நாங்கள் அவரது நேரடி வாரிசுகள். அதற்கான எல்லா ஆவணமும் எங்களிடம் இருக்கிறது” என்றார்.தற்போது கர்னி சேனா அiப்பின் தலைவர் லோகேந்திர சிங் கால்வியும், தன்னை ராமரின் வம்சாவளி என்று கூறியுள்ளார். “நாங்கள் உதய்ப்பூர் ராஜ பரம்பரையைச் சேர்ந்த சிசோடியா வகுப்பைச் சேர்ந்தவர்கள். இந்த சிசோடியா பரம்பரை, ராமரின் மக னான லவனின் வம்சம் ஆகும்” என்று லோகேந்திர சிங் விளக்கியுள்ளார்.மேலும், “ராமர் பிறந்த இடத்தில், ஒரு ராஜ அரண்மனையை ரூ. 1400 கோடிசெலவில் கட்ட வேண்டும்; நாட்டிலுள்ள 10 கோடி சத்திரியர்கள் தலா ரூ. 150 அளித்தாலே, இந்த தொகையை விட அதிகம் கிடைத்து விடும்; அப்படி நாங்கள் கட்டும் அரண்மனையே ராமருக்கு கோயிலாக அமையும்” என்றும் கால்வி ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.