tamilnadu

ரயில்வே தனியார்மயம்... 1ஆம் பக்கத் தொடர்ச்சி

அலை அலையாக எழுகிறது ரயில்வே தொழிலாளர் போராட்டம்

சென்னை, நவ.22 - ரயில்வே தொழிற்சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் “ரயில்வேயை பாது காப்போம், தேசத்தை பாதுகாப்போம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் பெரம்பூரில் வெள்ளியன்று (நவ.22)  நடை பெற்றது. தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன்(டி.ஆர்.இ.யூ.) செயல் தலைவர் ஏ.ஜானகிராமன் தலைமை தாங்கினார். கருத்தரங்கை துவக்கி வைத்து சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் உரை யாற்றினார். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், ராஜூப் குமார் குப்தா (சித்தரஞ்ஜன் லோகோ ஒர்க்ஸ் லேபர் யூனியன், (சிஐடியு மேற்கு வங்கம்), ஜான் வின்செண்ட் (அகில இந்திய ஸ்டேஷன் மாஸ்டர்ஸ் சங்கம்),  கே.வி.ரமேஷ் (இந்தி யன் டெக்னிக்கல் சூப்பர்வைசர் அசோ சியேசன்), பார்த்தசாரதி (ஏ.ஐ.எல்.ஆர்.எஸ்.ஏ), கார்த்திக் (அகில இந்திய கார்ட்ஸ் கவுன்சில்), கஜேந்திரன் (சதர்ன் ரயில்வே இன்ஜினியர்ஸ் அசோசியேசன்), ரெஜி ஜார்ஜ் (அகில இந்திய அக்கவுண்ட்ஸ் அசோசியேசன்), எஸ்.ராமலிங்கம், பா. ராஜாராம் (ஐ.சி.எப். யுனைடெட் ஒர்க்கர்ஸ்  யூனியன்) ஆகியோர் பேசினர். முன்ன தாக முருகேசன் வரவேற்றார். வி.சுரேஷ் நன்றி கூறினார்.  இந்த கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறு வனமாக உள்ள ரயில்வேயை தனியார்மய மாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை களில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ரயில்வே  சொத்துக்கள், நிறுவனங்கள், உற்பத்திப் பிரிவுகள், ரயில்கள், ரயில்நிலையங்கள் ஆகியவற்றை வர்த்தக  ரீதியில் இயக்கும் வகையில்  தனியார்மயப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள் ளன. மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் ரயில் சேவையை வழங்கவேண்டும் என்பதற்காகவும் குறைந்த கட்டணத் தில் சரக்குகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல வுமே ரயில்வே நாட்டுடமையாக்கப் பட்டது. மேலும் வளர்ச்சியடையாத பகுதியில் வளர்ச்சியை உருவாக்கும் வகையில் ரயில்வே பாதைகள் போ டப்பட்டன. எனவே ரயில் பயணிகளுக் காகவும் அத்தியாவசிய பொருட்க ளைக் கொண்டு செல்லவும் சலுகை கள் வழங்கப்பட்டுள்ளன. இவை தொடர  ரயில்வே தொடர்ந்து சேவைத் துறையாகவே நீடிக்க வேண்டியது அவசியமாகும்.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது ரயில்வே ஆங்கிலேய அரசின் கட்டுப் பாட்டில் இருந்தது. காரணம் ராணுவத் தளவாடங்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல ரயில்களையே அரசு சார்ந்தி ருந்தது. இப்போதும் அதே நிலை நீடிக்கிறது. எனவே ரயில்வே துறை யை தனியார்மயமாக்குவது மக்கள்  விரோத - தேசவிரோத நடவடிக்கையா கும். ரயில்வேயை பாதுகாக்கவும் நாட்டை பாதுகாக்கவும் ரயில்வே ஊழி யர்கள் மற்றும் பொதுமக்களிடம் விரி வான அளவில் பிரச்சாரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

போராட்டத் திட்டங்கள்

ரயில்வே தனியார் மயத்திற்கு எதிராக மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள உலகப்புகழ்பெற்ற சித்த ரஞ்சன் லோகோ உற்பத்தி ஆலைத் தொழிலாளர்கள் தங்களது ஆலை வளாகத்தில் இருந்து கொல்கத்தா வில் உள்ள ஆளுநர் மாளிகை வரை வெறும் காலோடு நவம்பர் 30 முதல் டிசம்பர் 11 வரை ‘நீண்ட நடைபயணம்’ மேற்கொள்ளவுள்ளனர். அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய அட்டையை நாடு முழுவ தும் உள்ள ரயில்வே ஊழியர்கள் நவம்பர் 30 அன்று அணிந்து பணி யாற்றுவர். மேலும் அனைத்து ரயில்வே பணிமனைகளிலும் முக்கிய ரயில்வே மையங்களிலும் ஆதரவு கூட்டங்க ளும் நடைபெறும். 

மாபெரும் பிரச்சாரம்

ரயில்வே தனியார் மயத்தை எதிர்த்து டிசம்பர் 1 முதல் 10 வரை நாடு தழுவிய பிரச்சாரம் மேற்கொள் ளப்படும். இதில் முதல் 5 நாட்கள் ஊழி யர்கள் மத்தியிலும் மீதமுள்ள 5 நாட்கள் பொதுமக்கள் மத்தியிலும் பிரச்சாரம் செய்யப்படும். டிசம்பர் 11 அன்று சென்னை, திருவனந்தபுரம், கொல்கத்தா ஆகிய இடங்களில் உள்ள ஆளுநர் மாளிகை நோக்கி ரயில்வே ஊழியர்களின் மாபெரும் பேரணி நடைபெறும்.

நாடாளுமன்றம் முன்பு தர்ணா

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள பிப்ரவரி மாதம் அனைத்து ரயில்வே தொழிற்சங்கங்களின் ஆதர வோடு நாடாளுமன்றம் முன்பு மாபெ ரும் தர்ணா போராட்டம் நடைபெறும். இதற்கான தேதி மற்ற சங்கங்களோடு பேசி பின்னர் அறிவிக்கப்படும்.

அங்கீகாரத்தேர்தல்

ரயில்வே ஊழியர்களின் ஜனநாயக உரிமையை பறிக்கும் வகையில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலுக் கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பாதியிலேயே தேர்தலை ஒத்தி வைத்து ரயில்வே வாரி யம் நடந்துகொண்ட விதம் சரியல்ல.உடனடியாக ரயிலவே நிர்வாகம் சங்க அங்கீகாரத் தேர்தலை நடத்த முன்வரவேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயூ), அகில இந்திய லோகோ ஓட்டும் தொழிலாளர்கள் சங்கம் (ஏஐஎல்ஆர்எஸ்ஏ), இந்திய ரயில்வே ஊழியர் சம்மேளனம் (ஐஆர் இஎஃப்), அகில இந்திய ஸ்டேஷன் மாஸ்டர்ஸ் யூனியன் (ஏஐஎஸ்எம்ஏ), ஐசிஎப் யூனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன், தென்மேற்கு ரயில்வே ஊழியர் சங்கம், அகில இந்திய ரயில்வே அக்கவுண்ட்ஸ் ஊழியர் சங்கம் (ஏஐஆர்எஸ்ஏ) உள்ளிட்ட தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய ரயில்வே தனியார் மயத்திற்கு எதிரான ஒருங்கிணைப்புக்குழு உருவாக்கப் பட்டுள்ளது.