நாகர்கோவில்:
மத்திய பாஜக அரசு கொரோனா ஊரடங்கில் 151 பயணிகள் ரயில்களை 100க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் தனியாருக்கு டெண்டர் விட வெளியிட்டுள்ள அறிவிப்புகளை உடனே திரும்பப் பெற வேண்டும்என வலியுறுத்தி டிஆர்இயு சார்பில் நாகர்கோவில் கோட்டார்ரயில் நிலையம் முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சரக்கு ரயில் போக்குவரத்து 30 சதவீதம் தனியாருக்கு தாரைவார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும், 2011ம் ஆண்டு முதல் அமலில் உள்ள 78 நாட்கள் போனஸ் திட்டத்தை விட கூடுதலான போனஸ் அறிவிப்பை அரசு உடனடியாக வெளியிட வேண்டும், 55 வயது அல்லது30 வருட சர்வீஸ் முடிந்த தொழிலாளர்களை பரிசீலித்து கட்டாய ஓய்வு கொடுக்கும் உத்தரவை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, டிஆர்இயு கிளை செயலாளர் அகஸ்டின் ஜேக்கப் தலைமை வகித்தார். நிர்வாகி முருகன், எஐஎல்ஆர்எஸ்எ மண்டல பொருளாளர் நாகராஜன், சிஐடியு மாவட்ட செயலாளர் கே.தங்கமோகன், மாநிலக்குழுஉறுப்பினர் எஸ்.அந்தோணி ஆகியோர் பேசினர். இதில், டிஆர்இயு நிர்வாகிகள், இரயில்வே தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.