சூரத்:
குஜராத் மாநிலம் சூரத்தில் புலம்பெயர் தொழிலாளர்களிடம் 630 ரூபாய் ரயில் கட்டணத்துக் குப் பதிலாக 800 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களில் தங்கியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்குசிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்த நரேந்திர மோடி அரசு,ரயில் கட்டணத்தில் 85 சதவிகிதத்தை அரசே ஏற்கும் என்று ஜம்பம் அடித் தார். ஆனால், புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலித்தே ரயில்வே அவர்களை சொந்தஊருக்கு ஏற்றிச்சென்று வருகிறது.
இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து உத்தரப்பிரதேசம் சென்ற புலம்பெயர் தொழிலாளர்களிடம், உரிய தொகையைக் காட்டிலும் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சூரத்திலிருந்து உத்தரப்பிரதேசம் செல்வதற்கு, அரசு நிர்ணயித்துள்ள ரயில் கட்டணம் 630 ரூபாய்என்ற நிலையில், 800 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக சோனிகா என்ற பயணி கூறியுள்ளார். அதிகபணம் கொடுத்தும், தங்களுக்கு சரியான உணவுகூட வழங்கப்படவில்லை என அவர் புகார் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பயணியான சுபாஷ்என்பவர், சூரத்தில் இடைத்தரகர்கள்தான் எங்களுக்கு ரயில்டிக்கெட்டையே வழங்கினார்கள்; முன்கூட்டியே எங்களிடம் பணத் தையும் பெற்றுக் கொண்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.இதே சூரத்தில், இரண்டு நாட்களுக்கு முன்பு, பாஜக கவுன்சிலரின் தம்பி ஒருவர், புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்குஅனுப்ப, தலைக்கு ரூ. 1000 விகிதம் ரூ. 80 ஆயிரம் பேரம் பேசி கையும் களவுமாக சிக்கியது குறிப்பிடத்தக்கதாகும்.