புதுச்சேரி:
பள்ளி மாணவிகள் பாலியல் வல்லுறவு வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண் டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் புதுச்சேரி அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளது.
2014 ஆம் ஆண்டு பள்ளி மாணவிகள் பாலியல் வல்லுறவு வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான புதுச்சேரி காவலர்களைக் கைது செய்ய வேண்டும் எனப் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. அதன் பிறகு கைது செய்யப் பட்டனர். இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த வாரம் வெளியானது. இது குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்தியத் துணைத் தலைவர் சுதாசுந்தரராமன், தமிழ் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப் பட்டது ஆச்சிரியபட வைத்துள்ளது. இத்தீர்ப்பு ஏற்புடையதாக இல்லை. குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் மீது போதிய ஆதாரங் களை புதுச்சேரி காவல்துறை சமர்ப்பிக்கவில்லை என்றே தெரிகிறது.மேலும் காவல்துறையைச் சேர்ந்தவர்களே இப்படி வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளனர் என்றால் தனி நபர்கள், பணம் படைத்தவர்கள் தவறு செய்தால் எப்படி தண் டனை கிடைக்கும் என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, புதுச்சேரி அரசு முறையான ஆதாரங்களைத் திரட்ட வேண்டும். இதில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உரிய விசாரணை மேற் கொண்டு இந்த வழக்கினை மேல்முறையீடு செய்யப் புதுச்சேரி அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் நாடு முழுவதும் பெண்கள், சிறுமிகள் மீதான வன் கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இக்குற்றச் சாட்டுகள் மீது வெறும் 19 விழுக்காடு மட்டுமே ஆதாரம் சமர்ப்பிக்கப்படுவது வேதனையளிக்கிறது.
போராட்டம்
புதுச்சேரியில் ஏற்கனவே அமைச்சராக இருந்தவரின் மனைவி குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டார். அப்போதும் ஜனநாயக மாதர் சங்கம்தான் போராடியது. பெண்கள் ஆணையம் அமைக்கக் கோரி பலகட்ட போராட்டங்களை நடத்தியதும் மாதர் சங்கம் தான்.எனவே, புதுச்சேரி அரசு இன்னும் நான்கு தினங்களுக் குள் இவ்வழக்கை மேல்முறையீடு செய்யவில்லை என்றால் புதுச்சேரியில் உள்ள அனைத்து பெண்கள் அமைப்புகளையும், பொதுமக்களையும் திரட்டி மீண்டும் மாபெரும் போராட் டத்தை மாதர் சங்கம் நடத்தும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.இச்சந்திப்பின் போது புதுச் சேரி பிரதேச தலைவர் சந்திரா, செயலாளர் சக்தியா ஆகியோர் உடனிருந்தனர்.