புதுதில்லி:
மத்திய பாஜக அரசானது, தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக, பொதுத்துறை நிறுவனங்களை அழிப்பதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா குற்றம் சாட்டியுள்ளார்.ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள்,உரிமம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணம் என்ற வகையில், மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய 92 ஆயிரத்து 642 கோடி ரூபாயை பாக்கி வைத்துள்ளன.
குறிப்பாக, வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் 23 ஆயிரத்து 920 கோடி ரூபாயையும், ஏர்டெல் 11 ஆயிரத்து 746 கோடிரூபாயையும் பாக்கி வைத்துள்ளன. ரிலையன்ஸ் ஜியோ 6 ஆயிரத்து 670கோடி ரூபாயை செலுத்தாமல் உள்ளது.இதனை உடனடியாக வழங்க வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. ஆனால், மத்திய பாஜக அரசோ, 42 ஆயிரம் கோடிரூபாய்க்கும் மேலான ஸ்பெக்ட்ரம் உரிமத்திற்கான நிலுவைத் தொகையை செலுத்த, தனியார் தொலைத் தொடர்புநிறுவனங்களுக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கியது.இதனைக் குறிப்பிட்டே, பவன் கேரா,மத்திய அரசைக் குற்றம் சாட்டியுள்ளார்.“தேர்தல் பத்திரம் மூலம் பல்லாயிரம்கோடி ஆதாயம் அடைந்ததற்கு நன்றிக்கடனாக மத்திய அரசு இதனைச் செய்கிறதா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் போன்ற பொதுத்துறைநிறுவனங்கள், ரூ.7 ஆயிரம் கோடி வரை லாபம் ஈட்டியதாகவும், ஆனால்,கடந்த 5 ஆண்டுகளில் இந்த நிறுவனங்கள் ரூ. 11 ஆயிரம் கோடி வரை இழப்பைச் சந்தித்து இருப்பதாகவும் பவன் கேரா தெரிவித்துள்ளார்.