tamilnadu

img

மின்விநியோகம் தனியார் மயத்தை கண்டித்து புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி:
யூனியன் பிரதேசங்களின் மின்விநியோகத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்தியபாஜக அரசின் முடிவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் சார்பில் புதுச்சேரியில் 50க்கும் மேற்பட்ட மையங்களில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் மின்சார திருத்தச்சட்டம் 2020 மூலம் விவசாயிகள் மற்றும் குடிசை களுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்ய மத்திய அரசு முனைப்புகாட்டுகிறது.  மாநில அரசின் மானியங்கள் ரத்து செய்யபபடவுள்ளன, மின் கட்டணத்தை தனியார் முதலாளிகளே தீர்மானிப்பதற்கான அனுமதியும் பொதுப்பட்டியலில்  உள்ள மின்சாரத்தைமத்திய பட்டியலுக்கு கொண்டு செல்லும் முடிவு  மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும்  நடவடிக்கையாகும். எனவே புதுச்சேரியில் மின் துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை  கைவிடக்கோரியும், தொடர்ந்து அரசுத்துறையாகவே நீடிக்கவேண்டும் என்று வலியுறுத்தியும் இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி காந்திவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேசக்குழு உறுப்பினர் ஆர்.சரவணன் தலைமை தாங்கினார். மத்தியக்குழு உறுப்பினர் சுதாசுந்தரராமன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள்,  பிரதேசக்குழு மூத்த உறுப்பினர் தா.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ராமசாமி, நிலவழகன்,ராமச்சந்திரன் உட்பட திரளானோர் இதில் பங்கேற்றனர்.  

முன்னதாக சமூக இடைவேளிவிட்டு முககவசம் அனிந்து கோரிக்கை பதாகைகளுடன் ஆர்ப்பாட்த்தில் பங்கேற்றனர். இதே போல் பாகூர், மண்ணாடிப்பட்டு, வில்லியனூர், உழவர்கரை ஆகிய இடைக்குழுக்களுக்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் இப்போராட்டம் நடைபெற்றது.