புதுச்சேரி, மார்ச் 14- முதல்வரின் வேண்டுகோளை ஏற்று தேசிய சுகாதார இயக்க ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் தற்காலிக மாக தள்ளிவைப்பு. புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி நலவழி துறையில் தேசிய சுகாதார இயக்கத் திட்டத்தில் கடந்த 14 ஆண்டுகளாக சொற்ப ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் ரெகுலர் ஊழியர்களின் அதே கல்வித் தகுதியுடன், அதே பணிகளை செய்துவரும் என் ஆர் எச் எம் ஊழியர்களின் பணி நிரந்தர கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கடந்த 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் புதுச்சேரி அமைச்சரவையின் தீர்மானங்களை துணைநிலை ஆளுநர் நிறைவேற்றித் தர வலியுறுத்தி கடந்த மார்ச் 2ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தை என் ஆர் எச் எம் ஊழி யர்கள் இரவு பகலாக நடத்திவந்தனர். இந்நிலையில்முதல்வரின் நாடாளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் இடத்திற்கு நேரில் வந்து ஊழியர்களின் பணி நிரந்தர கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து அமைச்ச ரவை கூடி 33 விழுக்காடு சுகாதாரத்துறையில் உள்ள நிரந்தர பதவிகளில் இட ஒதுக்கீடு செய்வது என்று முடிவெடுத்து ஆளு நருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார். இருப்பி னும் புதுச்சேரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர வைக்கும் ஆளுநருக்கும் இடையே யாருக்கு அதிகாரம் என்ற வழக்கில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை யின் முடிவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ள நிலையில், அதை அடிப்படை யாகக் கொண்டு மீண்டும் ஆளுநருக்கு பணி நிரந்தர கோப்பு அனுப்பி வைக்கப்பட்டு, ஒப்புதல் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் ஒவ்வொரு ஊழியருக்கும் தலா ரூ. 10 ஆயிரம், ஊதியத்தில் உயர்த்தி வழங்கும் வகையில் இரண்டு நாளில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்று உறுதி அளித்ததோடு திட்ட இயக்குனரோடு பேசி என் ஆர் எச் எம் ஊழியர்களின் பணி நீக்கம் என்பது கைவிடப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. முதல்வர் அவர்களின் வாக்குறுதியின் அடிப்படையில் சுகாதாரத் துறையில் பணி செய்யும் என் ஆர் எச் எம் ஊழி யர்கள் நடத்தி வரும் போராட்டத்தை கைவிட்டு மக்களுக்கான சுகாதார சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பொது மக்களின் சுகாதார சேவையில் ஊழியர்க ளுக்கும் பங்கு இருப்பதை கணக்கில் கொண்டு எதிர்வரும் 31. 3 .2020 வரை காத்திருப்பு போராட்டத்தை தள்ளி வைப்பது என்றும் ஊழியர் சங்கம் மற்றும் சம்மேளன பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.