tamilnadu

img

விமானிக்கு கொரோனா... பாதியில் திரும்பிய இந்திய விமானம்

தில்லி 
கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க வந்தே பாரத் என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களை மத்திய இயக்கி வருகிறது.  

இந்நிலையில் உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காகத் தில்லியிலிருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் இன்று பிற்பகல் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தான் வான்பகுதியில் சென்றுகொண்டிருக்கும் பொழுது விமானத்தை இயங்கிக்கொண்டிருந்த விமானி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. 
உடனடியாக விமானிகளைத் தொடர்பு கொண்ட ஏர் இந்தியா அதிகாரிகள் உடனடியாக தில்லிக்கு விமானத்தைத் திருப்ப உத்தரவிட்டனர். இதனால் பயணத்தைப் பாதியில் முடித்துக்கொண்ட ஏர் இந்தியா சிறப்பு விமானம் மதியம் 12.30 மணியளவில் தில்லி வந்து சேர்ந்தது. மேலும் விமானத்திலிருந்த விமானிகள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். 

கவனக்குறைவால் ஏற்பட்ட விளைவு 
தில்லியிலிருந்து விமானம் புறப்படுவதற்கு முன்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட விமானியின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்த குழு, பாசிட்டிவ் என்பதற்குப் பதிலாக நெகட்டிவ் என தவறுதலாகப் படித்ததே இந்த குழப்பத்திற்குக் காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளன. நல்லவேளை விமானம் ரஷ்யா செல்வதற்குள் விமானியின் மருத்துவ பரிசோதனையை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். இல்லையென்றால் ரஷ்யாவிலிருந்து திரும்பத் தயாராக இருந்த அனைவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.