புதுதில்லி:
கச்சா எண்ணெய் விலைபடுவீழ்ச்சி அடைந்த நிலையில்அதன் பலன்களை மக்களுக்குவழங்குவதற்கு மாறாக, பெட்ரோலுக்கு லிட்டருக்கு 13 ரூபாயும், டீசலுக்கு லிட்டருக்கு 10 ரூபாயும் கலால் வரியை உயர்த்தி மத்திய மோடி அரசு மக்களை வஞ்சித்துள்ளது.இதன்மூலம், 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயை மக்களிடமிருந்து பறிக்க உள்ளது.முன்பு மார்ச் மாதம் உயர்த்தப் பட்ட வரியையும் சேர்த்தால் சுமார் 2 லட்சம் கோடி ரூபாயை மக்களிடமிருந்து சுரண்ட திட்டமிட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மோடி அரசின் இந்த கலால் வரி உயர்வு, தேசவிரோத நடவடிக்கை என்றுகாங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளரான ரன்தீப் சிங்சுர்ஜேவாலா கண்டனம் தெரிவித்துள்ளார்.“ஒட்டுமொத்த தேசமும்கொரோனா வைரஸூக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக் கிறது. இந்தப் போராட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கடை உரிமையாளர்கள்,சிறு வர்த்தகர்கள், அனைவரும் கையில் பணமில்லாமல் தவிக்கின்றனர். ஆனால், பெட்ரோல், டீசல் உற்பத்தி வரியைஉயர்த்தி 130 கோடி இந்தியர்களிடம் இருந்து மத்திய அரசு1 லட்சத்து 40 ஆயிரம் கோடிபணத்தை கொள்ளையடிக்கிறது. மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடிப்பது பொருளாதார ரீதியாக தேச விரோதம். மத்திய அரசு தன்னுடைய இழப்புகளை சட்டவிரோதமாக, வலுக்கட்டாயமாக சரிக்கட்டுவது மனிதநேயமில்லாதது, கொடூரமானது, இரக்கமற்றது” என்று ரன்தீப் சிங் சாடியுள்ளார்.