புதுதில்லி:
முன்னெப்போதும் இல்லாத வகையில், கொரோனா காலகட்டத்தில் ரொக்கப் பணப்புழக்கம் இரண்டு மடங்கு அதிகமாகி இருப்பதாக ரிசர்வ் வங்கிகூறியுள்ளது.
2016-ம் ஆண்டு இந்திய அரசால் 1000 ரூபாய், 500 ரூபாய்நோட்டுகள் செல்லாது என அறிவிக்கும்போது பணப்புழக்கம் நாட்டின் மொத்த ஜிடிபி-யில் 5.9 சதவிகிதமாக குறைந்தது. இது வரலாற்றிலேயே மிகவும் குறைவானதாகும்.இதனால் டிசம்பர் மாதம் ஜிடிபி-யில் 5.96 சதவிகிதம் அளவிற்கு ரிசர்வ் வங்கி பணத்தை அச்சிட்டு வெளியிட்டது. பொருளாதாரம் மெல்ல மெல்ல அதிகரிக்க 2020 பிப்ரவரியில் 11.11 சதவிகிதமாக பணப்புழக்கம் உயர்ந்தது. ஆனால் கொரோனா காலத்தில், 2020 ஜூனில் அது 12.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மார்ச் மாதம்25ம்தேதி அன்று கொரோனாவைரஸ்தொற்றை கட்டுப்படுத்தபொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. மக்கள் வெளியே செல்லத் தடை, அலுவலகங்கள், நிறுவனங்கள், கடைகள்அடைப்புஎன அனைத்தும் மூடப்பட்டதால் பணப் பரிவர்த்தனை ஆன்-லைன் மூலமே நடைபெற்றது.இந்நிலையில், கொரோனா தொற்று காலத்தில் இணையசேவையும் முடங்கினால் என்னசெய்வது? என நினைத்த மக் கள், இந்த காலக்கட்டத்தில் பணம்ரொக்கமாக கையில் இருந்தால்தான் பாதுகாப்பு என நினைத்து,அதிகளவிலான பணத்தை வங்கியிலிருந்து எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.இதன் காரணமாக, பணமதிப்பு நீக்க காலத்தை காட்டிலும் இரண்டு மடங்கு ரூபாய் நோட்டுகளை தற்போது வெளியிட்டுள்ளதாகவும் ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது.