புதுதில்லி:
ஓய்வுபெறும் முன் ராஜினாமா செய்யும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.20 ஆண்டுகள் பணியில்இருந்த பின்னர் ராஜினாமா செய்த அரசு ஊழியர் ஒருவருக்கு ஓய்வூதியம் வழங்க தில்லி உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்துயமுனா பவர் லிமிட்டட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.இந்த வழக்கில் நீதிபதிகள் சந்திரசூட், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. அதில், விருப்ப ஓய்வும்ராஜினாமாவும் வெவ்வேறுஎன்பதை தெளிவுபடுத்தியுள்ளது. ராஜினாமா செய்துவிட்டு செல்லும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பெறும் தகுதி இல்லை. 2003 டிசம்பருக்கு முன்பு நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இச்சட்டம் பொருந்தும் என்றும் ஓய்வூதிய சட்டம் அரசுப் பணியில் உள்ள ஊழியர்களுக்கும் பாதுகாப்புத்துறை ஊழியர்கள், சிவில் அரசு ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் பொருந்தும் என்றும்உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.