புதுதில்லி:
ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சி.பி.ஐ. தொடர்ந்த இந்த வழக்கில் அவருக்கு உச்சநீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது.இதே வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர். இந்த வழக்கில் ப.சிதம்பரம் தரப்பில் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான வாதங்கள் முடிந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.முன்னதாக, சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அமலாக்கத்துறை தனது வாதத்தில் குறிப்பிட்டது.