கொரோனா தொற்று காலத்தில் மருத்துவ பணியில் ஈடுபட்டு உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கையை கூற மறுத்ததற்கு மருத்துவ சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தொற்று நோய் சட்டம் 1897 மற்றும் பேரழிவு மேலாண்மை சட்டத்தை நிர்வாகிக்கும் தார்மீக அதிகாரத்தை அரசு இழப்பதாக மருத்துவ சங்கம் கூறியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக 382 மருத்துவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த மருத்துவர்கள் குறித்த என்ற விதமான தகவல்களையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவதன் உள்ளிட்ட அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் அறிவிக்காதது மருத்துவ சங்கத்தினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகள் மாநிலங்களின் கட்டுப்பாட்டில் வருவதால், எந்த இழப்பீடு குறித்த தகவல் இல்லை என்ற மத்திய அமைச்சர் அஷ்வினி குமார் அறிக்கையில் தெரிவித்திருந்ததை மருத்துவ சங்கத்தின் கண்டித்துள்ளனர். மருத்துவர்கள் மக்களுக்கு ஆதரவாக நின்ற தேசிய வீராங்கனைகள் கடமையை செய்தவர்களை கைவிடுவதற்கு சமம் என மருத்துவ சங்கம் கூறியுள்ளது. கொரோனா தொற்று நோயால் உயிரிழக்கும் மருத்துவர்களை தியாகிகளாக போற்ற வேண்டும். ஆனால், ஒரு பக்கம் மருத்துவ பணியாளர்களை கொரோனா வாரியர்ஸ் என கூறுகிறார்கள். மறுபக்கம் அவர்களது குடும்பங்களுக்கு கிடைக்க வேண்டிய பயன்களை தர மறுத்து மத்திய அரசு நாடகம் ஆடி வருகிறது.
இதேபோல, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழப்பு குறித்து எந்த விதமான தகவல்களும் மத்திய அரசிடம் இல்லை என கூறியது, மிகவும் கண்டனத்திற்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளது.