tamilnadu

img

60 நாட்களாகியும் குற்றப்பத்திரிகை இல்லை: சுங்கத்துறை வழக்கில் ராமிஸுக்கு ஜாமீன்

கொச்சி:
கைது செய்யப்பட்டு 60 நாட்களுக்குப் பிறகும் சுங்கத்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத்தவறியதால் தங்க கடத்தல் வழக்கில்ஐந்தாவது குற்றவாளியான கே.டி.ரமீஸுக்கு  ஜாமீன் வழங்கப்பட்டது. 

யுஏஇ தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட சரித்,ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பெரிந்தல்மன்னாவைச் சேர்ந்த ரமீஸ் கைது செய்யப்பட்டார். குற்றவாளிகள் உட்பட பெரியகும்பல் எப்போதும் ரமீஸுடன் காணப்பட்டதாகவும் சுங்கத்துறை விசாரணையில் தெரியவந்தது. தங்க கடத்தலுக்கான திட்டம் தீட்டியது ரமீஸ் எனவும், தூதரக பார்சல்மூலம் வரும் தங்கத்தை தேவையானோருக்கு வழங்க தலைமை வகித்ததும் ரமீஸ்தான் எனவும் மற்ற குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்தனர்.வெளிநாடுகளிலும் இவருக்கு நல்லதொடர்புகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. கோவிட் ஊரடங்கை பயன்படுத்தி அதிக அளவில்தங்கம் கொண்டுவர திட்டமிட்டதும் ரமீஸ்தான். 

ரமீஸ் ஜூலை 12 ஆம் தேதி சுங்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். சுங்கத்துறையினர் தங்கத்தை பறிமுதல் செய்தபோது ரமீஸ் திருவனந்தபுரத்தில் இருந்தார். ரமீஸ் தான் சரித், சொப்னா, சந்தீப் நாயர் ஆகியோரைச் சந்தித்து பார்சலை விடுவிப்பதற்கான முயற்சி மேற்கொண்டார். என்ஐஏபதிவு செய்த வழக்கில் ஜூலை 27அன்று ரமீஸ் கைது செய்யப்பட்டார்.அவர்கள் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட பின்னர், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிக்கையில், கடத்தல் வழக்கின் சூத்திரதாரி ரமீஸ் என விவரித்தனர். 2015 ஆம்ஆண்டில் கோழிக்கோடு விமான நிலையம் வழியாக 17 கிலோ தங்கத்தை கடத்தியது உட்பட பல வழக்குகளில் ரமீஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல்செய்யப்பட்டது. வன விலங்குகளைதுப்பாக்கியால் வேட்டையாடியதற்காக வளையார் வனத்துறையினர் கடந்த ஆண்டு தாக்கல் செய்தவழக்கிலும் ரமீஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இணை ஆணையர் இடமாற்றம்

தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணை விரைவில் முடிவடையும் என்கிற நம்பிக்கையை ஆரம்ப கட்டத்தில் சுங்கத்துறைஅளித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் வெளிநாடுகளில் உள்ளவர்களையும் விசாரித்தால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம் என்று சுங்கத்துறை புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த கட்டத்தில்தான் விசாரணைக்கு தலைமை தாங்கிய இணை ஆணையர் நியாயமற்ற முறையில் நாக்பூருக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து விசாரணைக் குழுவின் இரண்டு கண்காணிப்பாளர்கள் உட்பட கடத்தல் தடுப்புப் பிரிவின் எட்டு உறுப்பினர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இறுதியாக, உதவிஆணையர் மற்றொரு பிரிவுக்கு மாற்றப்பட்டார். இணை ஆணையரின் இடமாற்றம் குறித்து சுங்கத்துறையின் விசாரணைக்குழு அதிருப்தி அடைந்தது. அனில் நம்பியார் குறித்த சொப்னாவின் வாக்குமூலம் கசியவிட்டதாக சுங்க அதிகாரிகளின் குற்றச்சாட்டுகளை அடுத்து விசாரணைக் குழு பலஅழுத்தங்களுக்கு உள்ளாகியது. விசாரணைக் குழுவினர் இன்னமும் இடமாற்ற அச்சுறுத்தலில் இருப்பதால் நிலைமை மோசமடைகிறது.