tamilnadu

இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்

மங்களூரு:
புகழ்பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் (69) உடல்நலக்குறைவால் வெள்ளியன்று காலமானார்.கர்நாடகா மாநிலம் பந்த்வால் அருகே உள்ள மிட்டகெரே என்ற கிராமத்தில் 1950ஆம் ஆண்டு பிறந்த கத்ரி கோபால்நாத், தமிழக அரசின்கலைமாமணி, மத்திய அரசின் பத்மஶ்ரீ உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர். கே. பாலசந்தரின் டூயட் படத்தில்கத்ரி கோபால்நாத்தின்சாக்சபோன் இசை முழுமையாக பயன்படுத்தப்பட்டது.கடந்த சில மாதங்களாககத்ரி கோபால்நாத் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் மங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.