புதுதில்லி:
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் நாடு முழுவதும் போராட் டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமார் 30-க்கும் மேற்பட்டோர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டிற்கு தங்களது உயிரைக் கொடுத்துள்ளனர். மத்திய மோடி அரசும், மாநில பாஜகஅரசுகளும் எவ்வளவுதான் அடக்குமுறையை ஏவினாலும், அதையும் தாண்டி மக்கள் போராட்டமாக சிஏஏ, என்ஆர்சிக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மறுபுறத்தில், சிஏஏ, என்ஆர்சி அவசியமானது என்று பாஜகவினரும் பேரணி,பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஈஷா யோகா மையம்என்ற பெயரில் மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனியை நடத்தி வரும் சாமியார் ஜக்கி வாசுதேவ், தனது நண்பரான பிரதமர் மோடிக்கு முட்டுக் கொடுக்கும் வகையில், குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும்தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்திற்குஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மாணவி ஒருவர் கேட்கும் கேள்விக்குஜக்கி வாசுதேவ் பதிலளிப்பது போன்று அந்த வீடியோ அமைந்துள்ளது.அதில் பேசும் ஜக்கி வாசுதேவ், “குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தற்போதுசட்டமாகியுள்ளது. அந்த சட்டத்தை நான்முழுமையாக படிக்கவில்லை. செய்தித்தாள்களின் மூலமே தெரிந்து கொண் டேன்” என்று கூறிவிட்டு, ஆனால், “குடியுரிமை சட்டம் தொடர்பாக மக்களி
டையே தவறான பிரச்சாரம் செய்யப்படுகிறது”என்று நாட்டாமை போல தீர்ப்பு கூறியுள்ளார்.
அத்தோடு நின்றிருந்தால் பரவாயில்லை. ஆனால், புள்ளிவிவரங்களைத் தருகிறேன் பாருங்கள் என்று அடுத்தடுத்து ஜக்கி வாசுதேவ் கூறியதுதான் அவரை வசமாக மாட்டி விட்டுள்ளது. சமூகவலைத்தளவாசிகள் ஜக்கியின் புள்ளிவிவரங்களில் உள்ள பொய்களை வரிக்கு வரி அம்பலப்படுத்தி வறுத்தெடுத்துள்ளனர்.“1947ஆம் ஆண்டு, பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் மக்கள் தொகை 23 சதவிகிதமாக இருந்தது. அது தற்போது3.7 சதவிகிதமாக உள்ளது” என்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். அதையே ஜக்கிவாசுதேவும் வாந்தி எடுத்துள்ளார்.ஆனால், பாகிஸ்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய வங்கதேசம்) பிரிந்த பிறகு, மேற்கு பாகிஸ்தானில் (தற்போதைய பாகிஸ்தான்) சிறுபான்மையினர் மக்கள் தொகை, 23 சதவிகிதமாக இருந்ததில்லை.
மேலும், பாகிஸ்தானின் 1961-ஆம்ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப் பின் படி, இஸ்லாமியர்கள் அல்லாத சிறுபான்மையினரின் மக்கள் தொகை 2.83 சதவிகிதமாகவும், 1972ஆம் ஆண்டு அது3.25 சதவிகிதமாகவும் இருந்துள்ளது. இது 0.42 சதவிகித உயர்வாகும். அதேபோல், 1981ஆம் ஆண்டு கணக்கெடுப் பின்படி, சிறுபான்மையினரின் மக்கள் தொகை 3.30 சதவிகிதமாகவும், 1998ஆம்ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள் தொகையில் 3.70 சதவிகிதமாகவும் தொடர்ந்து உயர்ந்துவந்துள்ளது. பாகிஸ்தான் சிறுபான்மையினரில் 80 சதவிகிதம் பேர் இந்துக்கள் என்பதும் இங்கே முக்கியமானது என்றுஆதாரங்கள் எடுத்து வைக்கப்பட்டுள்ளன.அதேபோல, பாகிஸ்தானில், இந்து முறைப்படியான திருமணம் சட்டத்துக்கு புறம்பானது என்று தனது வீடியோவில் ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார். உண்மைஎன்னவென்றால், 2017ஆம் ஆண்டிலேயே பாகிஸ்தான் நாடாளுமன்றம் இந்து திருமணங்களை அங்கீகரித்து சட்டமியற்றி விட்டது என்பதுதான். பாவம், யாரோ எழுதிக் கொடுத்ததை ஜக்கி வாசித்திருக்கிறார்.குடியுரிமைத் திருத்தச் சட்டம் மதரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளான அகதிகளுக்கு என்கிறார் ஜக்கி வாசுதேவ். ஆனால், ‘துன்புறுத்தலுக்கு உள் ளாகும் அகதிகள்’ என்ற வார்த்தைகள் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இடம் பெறவில்லை. தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி பேசியுள்ள ஜக்கி வாசுதேவ், “தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது எல்லா நாடுகளிலும் உள்ள வழக்கமான நடைமுறைதான். ஒவ்வொரு குடிமகனும் பதிவு செய்வது நாட்டுக்கு அவசியம்.
பிறப்புச் சான்றிதழ், ஆதார், ஒட்டுநர் உரிமம், வாக்காளர்அடையாள அட்டை இவற்றில் ஒன்றுஇருந்தால் பதிவு செய்து கொள்ளலாம். சிலர் இது எதுவுமே தங்களிடம் இல்லைஎன்கின்றனர். இவை எதுவும் இல்லை என்றால் நீங்கள் யார் (Who the hell are you?)” எனவும் சட்ட வல்லுநர் போலஜக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.ஆனால், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு அதிகாரப்பூர்வமாக எந்த விதிகளும் வகுக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, ஆதார் அட்டையை முறையானஆவணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று உள்துறை அமைச்சகமே அறிவித்துள்ளது.இவ்வாறு ஜக்கி வாசுதேவ் வெளியிட்ட மோசடியான வீடியோவைத்தான் “குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள் ளிட்டவை குறித்து ஜக்கி வாசுதேவ் அளித்த தெளிவான விளக்கத்தை பாருங்கள். அவர் வரலாற்று ரீதியான தொடர்பையும், நமது சகோதரத்துவ கலாச்சாரத்தையும் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். சிலரின் தவறான பிரச்சாரத்தையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்” என்று பிரதமர் மோடி ‘சபாஷ்’ போட்டுள்ளார். அந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.