கான்பூர்:
கான்பூரில் பிரதமர் மோடி தடுக்கி விழுந்த படியை இடிக்க, உத்தரப்பிரதேச மாநில பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது.கங்கை நதியை தூய் மைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சிலின் முதல் கூட்டம் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் டிசம்பர் 14-ஆம் தேதி நடைபெற்றது. கூட்டம் முடிந்து கங்கை நதியில், படகுப் பயணம் செய்து திரும்பிய பிரதமர் மோடி, படி ஏறும்போது கால் தடுமாறி கீழே விழுந்தார். அவருடன் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரைத்தாங்கிப் பிடித்து உதவி செய்தனர். இதில் மோடிக்குஎந்தவித காயமும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டது.இந்நிலையில் மோடி தடுக்கி விழுவதற்குக் காரணமான, அந்தப் படிகட்டுகளை இடித்து, மறுசீரமைக்க உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.“பிரதமர் தடுக்கி விழுந்த படி, மற்ற படிக்கட்டுகளைக் காட்டிலும் வேறுபட்டு இருக்கும். உயரம் சற்று குறைவாகஇருக்கும். இதற்கு முன்னர் வேறு சிலரும் அதே படியில் தடுமாறி விழுந்துள்ளனர். எனவே விரைந்து அந்த படியை மட்டும் இடித்து சரியானஉயரத்தில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று உ.பி. அரசு அதிகாரியான சுதிர் எம்.பாப்டே தெரிவித் துள்ளார்.