tamilnadu

img

உச்சநீதிமன்றம் கேள்வி மெகபூபாவை பிஎஸ்ஏ சட்டத்தில் கைது செய்தது ஏன்?

புதுதில்லி:
காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் (Public Safety Act- PSA) கீழ் கைது செய் யப்பட்டது குறித்து விளக்கம் அளிக்குமாறு காஷ்மீர் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு உரிமை மற்றும் மாநில அந்தஸ்தை ரத்துசெய்த மோடி அரசு, அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கள் பரூக் அப்துல்லா, உமர்அப்துல்லா, மெகபூபா முப்திஆகியோரை, பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத் தது.இந்நிலையில், மெகபூபாமுப்தி கைதை எதிர்த்து, அவரது மகள் இல்திஜா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், மெகபூபாமுப்தியை, பொதுப்பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது, ஏன்? என்று காஷ் மீர் நிர்வாகத்துக்கு கேள்வி எழுப்பியுள்ளது. உரிய விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.