tamilnadu

சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசார் அறிவிப்பு!

ஐ.நா. சபை, மே 2-ஜெய்ஷ் இ முகமது அமைப் பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐநாஅறிவித்துள்ளது. இது இந்தியா வுக்குக் கிடைத்த முக்கிய தூதரகரீதியான வெற்றியாகக் கருதப் படுகிறது. சீனா ஒப்புதல் அளித்துள்ளதால் அவர் சர்வதேச பயங்கர வாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐநா வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதீன் உறுதிப்படுத்தியுள்ளார்.கடந்த பிப்ரவரி 14ஆம் தேதியன்று புல்வாமாவில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் மத்திய ரிசர்வ் போலீஸ்படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்கு தலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இதையடுத்து இந்தியவிமானப் படையின் விமானங்கள் பாகிஸ்தானில் பாலகோட் பகுதியி லுள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பெரிய முகாமை குண்டு வீசித் தாக்கின.மசூத் அசாருக்குத் தற்போது வயது 50. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் பகவல்பூரில் பிறந்தஇவர் 2000ஆம் ஆண்டில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைத்தொடங்கினார். 2001ஆம் ஆண்டில்நடைபெற்ற நாடாளுமன்றத் தாக்குதல், ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதல், பதான்கோட் தாக்குதல், அண்மை யில் நடைபெற்ற புல்வாமா தாக்கு தல் ஆகியவற்றுக்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்கொலைப் படையினரை உரு வாக்குவதில் ‘வல்லவர்’ என்ற பெயர் மசூத் அசாருக்கு உண்டு.இதனிடையே, பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு மசூத் அசார் உடல்நலம் குன்றியதால் இறந்துவிட்டதாக சில செய்திகள் வெளியாகின. எனினும், தான் உயிருடன் இருப்பதாக மசூத் அசார் விளக்கமளித்தார்.

ஜெய்ஷ்இ முகமது அமைப்பின் அதி காரபூர்வ இதழான அல் கலாமில்மசூத் அசார் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். தனது உடல்நலம் பற்றி வெளியான அனைத்து செய்திகளையும் மசூத் அசார் மறுத்திருந்தார். மேலும், புல்வாமா தாக்குதல் ஒரு சிறந்த பணி என்று மசூத் அசார் - பயங்கரவாதிகளைப் பாராட்டியிருந்தார்.இந்நிலையில், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் ஒப்புக் கொண்டன. சீனாவின் ஒப்புதல் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறி விப்பது தொடர்பாக சீனாவிடம் தொடர் பேச்சுவார்த்தை இந்தி யாவின் தரப்பில் நடத்தப்பட்டது. இந்தியா வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே அவ்வப்போது சீனாவுக்கு அரசுப் பயணம் மேற்கொண்டு இவ்விவகாரம் தொடர்பாக சீன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.அண்மையில் சீன பிரதமர் ஜீ ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 30 அன்று சீனவெளியுறவுத் துறை அமைச்ச கத்தின் பேச்சாளர் கெங்க் சுவாங்செய்தியாளர்களிடம் பேசுகையில், “மசூத் அசாரை சர்வதேசபயங்கரவாதியாக அறிவிக்கும்விவகாரத்தில் சில முன்னேற்றங் கள் ஏற்பட்டுள்ளன. இவ்விவகாரம் முறையாகத் தீர்க்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், மசூத் அசார் விவகாரத்தில் சீனா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அவரை சர்வதேச பயங்கரவாதி யாக அறிவிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் மசூத் அசாரின் சொத்துகள் முடக்கப்படுவதோடு, அவர் வெளிநாடு களுக்குப் பயணிக்கவும் தடை விதிக்கப்படும்.