tamilnadu

img

இந்தியாவை இருளில் தள்ளும் பெரும்பான்மை வாதம்!

புதுதில்லி:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் பெரும்பான்மைவாதமும் சர்வாதிகாரமும் நாட்டை இருண்டமற்றும் நிலையற்ற பாதைக்கு இழுத்துச்செல்வதாக, ரிசர்வ் வங்கியின் முன்னாள்ஆளுநர் ரகுராம் ராஜன் விமர்சித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரகுராம் ராஜன் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் பேசியிருப்பதாவது: 

மோடி தனது முதல் ஆட்சிக் காலத்தில், பொருளாதாரத்துக்கு எந்தநன்மையும் செய்யவில்லை. ஏனென் றால், அரசின் அதிகாரங்கள் மிக அதிகமாக ஒரே இடத்தில் குவிந்திருந்தன. இதனால் வளர்ச்சியை எட்டுவது குறித்துதொடர்ச்சியான, தெளிவான பார்வை இல்லாத தலைவர்கள் அதிக அழுத்தத் திற்கு ஆளானார்கள்.தற்போதும் அமைச்சர்கள் அதிகாரமற்றவர்களாக உள்ளனர். அரசு அதிகாரிகள் சுயமாக எந்த முடிவையும் எடுக்கத் தயங்குகிறார்கள். தீவிரமான சீர்திருத்தம் குறித்து உறுதியான திட்டம் ஏதும் இல்லை.இந்தியாவில் தற்போது நிலவும் பொருளாதார மந்த நிலைக்கு, தவறானபணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும்மோசமான முறையில் அமல்படுத்தப் பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி)விதிப்பு ஆகியவையே தொடக்கப் புள்ளிகள் ஆகும். 

பொருளாதார வளர்ச்சியை உருவாக்க முடியாத அரசாக மோடி அரசுஇருக்கிறது. இதனால் தற்போது வளர்ச்சிகுறைந்து விட்டது. ஆனால், மக்களிடம் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக அரசுதனது நலத்திட்டங்களை அதிகப்படுத்திக்கொண்டே போகிறது. வளர்ச்சியை அடைவதற்கான மிகப்பெரிய நெருக்கடி இருக்கும் சூழலில், இதுபோன்ற செலவுகளை செய்யக்கூடாது.இது ஒருபுறமிருக்க, அமைப்புகளின் - நிறுவனங்களின் பலவீனமாக்கல் மூலம்அரசு சர்வாதிகாரம் என்ற அபாயத்தை நோக்கி நகர்கிறது. 1971-ஆம் ஆண்டுஇந்திரா காந்தி ஆட்சிக் காலத்துக்குப் பின் 2019-ஆம் ஆண்டு மோடி அரசின் விஷயத்தில் இது உண்மையாகியுள்ளது.லத்தீன் அமெரிக்காவின் பெரும் பான்மைவாதக் கொள்கைகளின் வழியில் இந்தியா செல்லும் அபாயம் ருவாகியுள்ளது .சர்வாதிகாரிகளால் நிறுவனங்கள் பலவீனம் அடைகின்றனவா பலப்படுகின்றனவா? என்பது முக்கியமானது. இந்தியாவில் நடந்துகொண்டிருப்பதோ ஊக்குவிக்கும் விதமானது அல்ல.உச்சநீதிமன்றம்கூட முன்புபோல செயல்படுவதைக் கைவிட்டு, காஷ்மீர் விவகாரத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவருவது பற்றியும் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஏராளமான மக்களை கட்டுப்பாடுகளுக்குள் வைத்திருப்பது பற்றியும் தட்டிக் கேட்காமல் அமைதி காக்கிறது.

பெரும்பான்மைவாதிகள் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவார்கள் என்றுநான் நம்பவில்லை. அவர்கள் அதனை பலவீனப்படுத்தவே செய்கிறார்கள். அதுதான் அவர்கள் கூறும் தேசிய ஒருமைப்பாட்டின் பொருள்.பெரும்பான்மையினருக்கான தேசியவாதம் என்பது பிரிவினையை உள்நோக் கமாகக் கொண்டது. ஏனெனில் அது ஏராளமான குடிமக்களை ‘மற்றவர்கள்’ என அடையாளமிடுகிறது. அவர்கள் தாங்களும் இந்நாட்டின் குடிமக்கள்தான் என்று நிரூபிக்க சாத்தியமே இல்லாதநிபந்தனைகளையே விதிக்கிறது. கடைசியில் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இதன்மூலம் என்ன நடக்குமென்றால், ஆபிரகாம் லிங்கன் சொன்னது போல ‘தனக்குள்ளே பிரிந்து கிடப்பவர்கள் நிலைத்து நிற்க முடியாது’. இவ்வாறு ரகுராம் ராஜன் பேசியுள்ளார்.