tamilnadu

img

உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியல்... 5-ஆவது இடத்திற்கு முன்னேறுகிறார் அம்பானி

புதுதில்லி:
உலகின் பெரும்பணக்காரர் கள் பட்டியலில், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ தலைவர் முகேஷ் அம்பானி, விரைவில் முதல் 5 இடங்களுக்குள் முன்னேறுவார் என்று சீனாவைச் சேர்ந்த ‘ஹூரன்’ஆய்வு நிறுவனம் (Hurun Research Institute) மதிப்பிட் டுள்ளது.
உலக பணக்காரர்களுக்கான ‘ஹூரன்’ (Hurun global richlist-2019) பட்டியலில் முகேஷ் அம்பானி தற்போது 8ஆவது இடத்தில் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 54 பில்லியன் டாலர்களாக உள்ளது. ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரராக அவர் திகழ்கிறார். இந்நிலையில், “ஹூரன் பட்டியலில் ‘முதல் பத்து இடங்களுக் குள் முன்னேறிய முதல் இந்தியர்’என்ற பெருமைக்குச் சொந்தக் காரரான முகேஷ் அம்பானி, இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் ‘முதல் ஐந்து’ இடங்களுக்குள் முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது: அப்போது அவரது சொத்து மதிப்பு 80 பில்லியன் டாலரைத் தாண்டிவிடும்” என்று ஹூரன் ரிப்போர்ட் தலைவர் ரூபெர்ட் ஹூக்வெர்ப் தெரிவித்துள்ளார்.தற்போது, ஹூரன் பட்டியலில், 147 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் முதலிடத்தில் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து பில் கேட்ஸ் இரண்டாம் இடத்திலும், வாரன் பபெட் மூன்றாம் இடத்திலும், பெர்னார்டு அர்னால்ட் நான்காம் இடத்திலும், மார்க் ஜூகர்பெர்க் ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றனர்.