புதுதில்லி:
நடப்பு 2020-21 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் மிக மோசமாக 6.1 சதவிகித வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று ‘நோமுரா நிறுவனம்’ (Nomura) தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், இதன்காரணமாக, ரிசர்வ் வங்கி தனது ஆகஸ்ட் மாதகொள்கை சீரமைப்புப் பணியை ஒத்திவைக்கும் எனவும், ரெப்போ வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் வரை குறைக்க வாய்ப்பிருப்பதாகவும் ‘நோமுரா’ நிறுவனம் கணித்துள்ளது.அதிகபட்சமாக, ஜூன் காலாண் டில் இந்தியப் பொருளாதாரம் 15.2 சதவிகித வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று கூறியிருக்கும் நோமுரா, ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 5.6 சதவிகிதம், அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 2.8 சதவிகிதம், ஜனவரி - மார்ச் காலாண்டில் 1.4 சதவிகிதம்என்ற அளவில் இந்த பொருளாதார வீழ்ச்சி இருக்கும் என்று மதிப்பிட் டுள்ளது.ஒட்டுமொத்தமாக, நடப்பு 2020-21 நிதியாண்டில் 6.1 சதவிகித வீழ்ச்சிஇருக்கும் என்று ‘நோமுரா’ கூறியுள்ளது.ரிசர்வ் வங்கி, கொரோனா பாதிப்பு தொடங்கியதிலிருந்து இதுவரையில் ரெப்போ வட்டி விகிதத்தை1.15 சதவிகிதம் வரையில் குறைத் துள்ளது. கொரோனா பாதிப்புகள் நீடிக்கும்பட்சத்தில் ரெப்போ விகிதம்மேலும் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.