tamilnadu

img

ராகுலுக்கு கெஜ்ரிவால் நிபந்தனை

புதுதில்லி:

மோடி, அமித்ஷா கூட்டணியை ஆட்சியிலிருந்து விரட்டுவதுதான் எங்களது நோக்கம் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். “கும்பல் கொலைகள், கலவரங்களை ஊக்குவிப்பவர், அரசியல் சாசனத்தை அவமதிப்பவர் மீது என்னால் அன்பு செலுத்த முடியாது. நிதின் கட்கரி, பிரதமராவதற்கு வேண்டுமானால் ஆதரவு அளிக்கத் தயார். தில்லிக்கு மாநில அந்தஸ்து அளிக்க காங்கிரஸ் தயாராக இருந்தால், ராகுல் காந்தி பிரதமராக வருவதற்கும் ஆதரவு அளிப்போம்” என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.