புதுதில்லி:
ஆர்எஸ்எஸ் ஏபிவிபி குண்டர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை புதனன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தித்து பேசினார். கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்கள் நடத்தும் போராட்டத்துக்கு தமது ஆதரவைதெரிவித்தார். பல்கலைக்கழக துணைவேந்தர் இதுவரை தாக்கப்பட்ட மாணவர்களை சந்திக்கவில்லை என்றும் இது தொடர்பாக அவர் எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை என்றும் கனிமொழியிடம் மாணவர்கள் தெரிவித்தனர். காஷ்மீர்மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகள் மோசமாக தாக்கப்பட்டிருப்பதை யும் கனிமொழி நேரில் சென்று பார்த்தார். எந்த நேரத்திலும், எவ்வித உதவிக்காக வும் தம்மைத் தொடர்புகொள்ளும்படி காஷ்மீர் மாணவர்களிடம் அவர் தெரிவித்தார்.