ஜேஎன்யு மாணவர்கள், 144 தடையை மீறி நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி சென்றனர்.
ஜேஎன்யு மாணவர்கள் உயர்த்தப்பட்டுள்ள விடுதிக் கட்டணத்தை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த மூன்று வாரங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் நாளான இன்று (திங்கள் கிழமை), தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டனர். ஜேஎன்யு பல்கலைக் கழக வளாகத்திலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் பேரணியாகப் புறப்பட்டனர். காவல்துறையினர் தொடக்கத்தில் பேரணி செல்ல அனுமதித்தனர். ஆயினும், பின்னர் பல்கலைக் கழகத்தின் வாயிலிலிருந்து சுமார் 500 மீட்டர் தூரம் சென்றபோது பேரணியில் சென்றவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மாணவர்களின் போராட்டத்தை நசுக்குவதற்காக பத்து கம்பெனிகள் அடங்கிய காவல்துறையினர் அனுப்பப்பட்டிருக்கின்றனர். ஒரு கம்பெனியில் சுமார் 70 முதல் 80 காவல்துறையினர் இருப்பார்கள்.
இது தொடர்பாக ஒரு மூத்த காவல்துறை அதிகாரி செய்தியாளர்களிடையே கூறுகையில் அசம்பாவித சம்பவம் எதுவும் நிகழ்ந்துவிடாது பார்த்துக்கொள்வதற்காக இவ்வாறு காவல்துறையினர் வந்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.
ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் என்.சாய் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாடாளுமன்றம் நோக்கி அமைதியானமுறையில் சென்ற மாணவர்களை, தில்லிக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், ஒரு குழுவை அமைத்திருப்பதன் மூலம் ஜேஎன்யு மாணவர்களை முட்டாளாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கையில் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை ஏன் நிறுத்தி வைக்க, அந்தக் குழுப் பரிந்துரைத்திட ஏன் தயாராயில்லை? உயர்த்தப்பட்ட கட்டண உயர்வு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றே நாங்கள் கோருகிறோம்,” என்றார்.
முன்னதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், ஜேஎன்யு பல்கலைக் கழகத்தில் இயல்பு நிலை திரும்புவதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு கோரி, மூவர் அடங்கிய குழு ஒன்றை அமைத்திருந்தது.
(ந.நி.