பாலக்காடு:
மலையாள கவிஞர் அக்கித்தத்தன் நம்பூதிரிக்கு ஞானபீடம் விருது வழங்கப்பட்டது அமைச்சர் ஏ.கே.பாலன் முதலமைச்சர் சார்பில் விருதை வழங்கினார்.
குமரநல்லூர் அமேற்றிக்காரயில் உள்ள அவரது வீட்டில் வியாழனன்று பிற்பகல் நடைபெற்ற விழாவை கேரளமுதல்வர் பினராயி விஜயன் காணொலிகாட்சி மூலம் தொடங்கி வைத்தார். கோவிட் கட்டுப்பாடுகளை பின்பற்றி விழா நடைபெற்றது.ஒரு வெண்கல சிற்பம், ரூ .11லட்சம் மற்றும் ஒரு பதக்கம் ஆகியவைவழங்கப்பட்டது. அக்கித்தத்தம் 2019 ஆண்டுக்கான ஞானபீடம் விருதைப் பெற்றவர். ஞானபீடத்தை வென்ற ஆறாவது மலையாளி அக்கித்தத்தம். 2008 ஆம் ஆண்டில், இவர் கேரள அர
சின் எழுத்தச்சன் விருதை வென்றார்.ஞானபீட விருதுக் குழுத் தலைவர்பிரதிபா, கமிட்டி இயக்குநர் மதுசூதனன் ஆனந்த், எம்.டி.வசுதேவன் நாயர்,இ.டி. முகமது பஷீர் எம்.பி. ஆகியோர் கவிஞரை ஆன்லைனில் வாழத்து தெரிவித்தனர்.எழுத்தாளரும் பத்திரிகையாளருமான அவரது ‘இருபதாம் நூற்றாண்டின் காவியம்’ என்கிற மலையாள கவிதைகள் நவீனத்துவத்தின் தொடக்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. வெண்ணக்கல்லின்டே கதா, பலிதர்ஷனம், அக்கித்தத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள், களிக்கொட்டிலில், ஐந்து நாடோடிப் பாடல்கள், மானசபூஜாஆகியவை இவரது முக்கிய படைப்புகள்.கவிஞர் ஜி.சங்கர குருப் முதன்முதலில் ஞானபீடம் விருதை மலையாளத்திற்கு பெற்றுத்தந்தார். பின்னர் தகழி, எஸ்.கே. பொற்றைக்காடு, எம்.டி.வசுதேவன் நாயர், ஓ.என்.வி.குருப் ஆகியோர் ஞானபீடம் விருதை வென்ற மலையாளிகளாவர்.