புதுதில்லி:
ஆதார் எண் இல்லாததற்காக நியாய விலைக் கடையில் பொருட்கள் வழங்க மறுக்கக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் பேசுகையில், நாடு முழுவதும் 86 சதவீத ரேசன் கார்டுகளில் ஆதார் எண் இணைக்கப்பட்டு விட்டது. ரேசன் கடைகளில் உள்ள பாயிண்ட் ஆப் சேல் கருவியில் ஆதார் எண் அடிப்படையில் பயனாளிகளின் அடையாளம் உறுதி செய்யப்படுகிறது.ரேசன் கார்டுதாரர்கள் யாருக்காவது ஆதார் இல்லாவிட்டாலோ அல்லது பாயிண்ட் ஆப் சேல் கருவியில் அடையாளம் காண்பதில் தவறு ஏற்பட்டாலோ, உணவு தானியங்கள் பெறுவதற்கு மாற்று வழிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.